Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சர்வதேச ரீதியான யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பிலான வழக்குகளில், ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன், தொடர்ந்தும் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாக இன்னர் சிட்டி பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய்வதற்காக அவர் நியமித்த நிபுணர்கள் குழுவின் அறிக்கை, இலங்கையில் புறக்கணிக்கப்பட்டது.

அத்துடன் அது தொடர்பில் பல்வேறு அழுத்தங்களை பான் கீ மூன் சந்தித்து வருகிறார்.

இதற்கிடையில் நேற்று முன்தினம் கிரிகிஸ்தான் நாட்டில் கடந்த வருடம் இடம்பெற்ற யுத்தத்தில், குற்றங்கள் இடம்பெற்றதாக கூறி, பிரபல எழுத்தாளர் கிமோ கல்ஜுனேனை அறிக்கை ஒன்றை வெளியிட்டதைத் தொடர்ந்து அவர் அந்த நாட்டினுள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான தீர்மானம் ஒன்று நேற்று முன்தினம் கிரிகிஸ்தான் நீதிமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் மார்ட்டின் நெசர்கீயிடம் இன்னர் சிட்டி பிரஸ் கேள்வி எழுப்பிய வேளையில், கிமோவின் அறிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஆகாது என தெரிவித்தார்.

எனினும் இந்த அறிக்கை பயன்படக்கூடியது என்று அவர் தெரிவித்தார்.

இதன்போது குறித்த அறிக்கையின் அடிப்படையில் கிரிகிஷ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவோ, அல்லது அங்கு இடம்பெற்று யுத்தக்குற்றங்கள் தொடர்பில் எந்த நடவடிக்கையும் ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ளாதா என்று இன்னர் சிட்டி பிரஸ் கேள்வி எழுப்பியது.

இதேபோன்ற செயற்பாட்டினையே இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பிலும் பான் கீ மூன் வெளிப்படுத்தி வருகிறார் என்று இன்னர் சிட்டி பிரஸ் நேற்றைய செய்தியாளர் சந்திப்பின் போது சுட்டிக்காட்டியது.

0 Responses to நிபுணர் குழு அறிக்கையின் பின்னர் நெருக்கடிகளை சந்திக்கும் மூன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com