Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ரணிலை விரட்டியடித்து ஐ.தே.கவை புதுப்பிக்க எடுக்கும் முயற்சிகளில் ஐ.தே.க உறுப்பினர் தொடர் தோல்விகளை அடைந்து வருகிறார்கள். தற்போது ரணில் எதிர்ப்பு அணி கொழும்பில் தெளிவாக ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க வருகிறார் ரணில். நாட்டின் அதிபர் சந்திக்காமல் எதிர்க்கட்சித் தலைவர் சந்திக்க ஜெ.யை சந்திக்க வருவது பலரதும் கவனத்தைத் தொட்டுள்ளது. மகிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பரான ரணில் ராஜபக்ஷவின் சமரச தூதை எடுத்துவர வழியிருக்கிறது என்றும் கருதப்படுகிறது.

இது குறித்து வெளியான செய்தி:

GTV News

இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கேவை சென்னைக்கு வருமாறு முதல்வர் ஜெயலலிதா அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதை ரணிலும் ஏற்றுள்ளதாகவும் அந்த செய்திகள் கூறுகின்றன.

ரணில் சென்னை வருவது உறுதியானால், தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற பின்னர் அவரை சந்திக்கும் முதல் இலங்கைத் தலைவர் ரணில் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ரணில் விக்கிரமசிங்கே தரப்பில் கூறுகையில், சென்னைக்கு வருமாறு ஜெயலலிதாவிடமிருந்து ரணிலுக்கு அழைப்பு வந்துள்ளது. அவரும் அதை ஏற்றுள்ளார். இருப்பினும் எப்போது முதல்வர் ஜெயலலிதாவை ரணில் சந்திப்பார் என்பது இறுதி செய்யப்படவில்லை என்றனர்.

0 Responses to ஐ.தே.க பிளவு - ரணில் ஜெயலலிதாவை சந்திக்கிறார் - GTV செய்திகள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com