Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தி.மு.க., எம்.பி.,யும் தனது மகளுமான கனிமொழியை சந்திக்க டில்லி சென்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி திகார் சிறைச்சாலைக்கு சென்றடைந்தார்.

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி கைதாகி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழியும், கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டியும் இன்று ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர்.

மே 20ம் தேதி இவர்கள் இருவரும் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை விசாரித்த சிறப்பு சிபிஐ கோர்ட் நீதிபதி ஓ.பி.ஷைனி, மனுக்களை நிராகரித்தார். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு உடனடியாக திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ளார் கனிமொழி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கனிமொழியும், சரத்குமாரும் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று மனு செய்தனர்.

திமுக தலைவர் கருணாநிதி இன்று டெல்லி வந்து சேர்ந்தார். அங்கு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகள் கனிமொழியை அவர் சந்தித்துப் பேசுகிறார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டி, முன்னாள் அமைச்சர் ராசா ஆகியோரையும் கருணாநிதி சந்தித்துப் பேசவுள்ளார்.

தனது டெல்லி பயணத்தின்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை கருணாநிதி சந்திக்க மாட்டார் என்று தெரிகிறது.

டெல்லி வந்து சேர்ந்த கருணாநிதி விமான நிலையத்திலிருந்து நேராக தாஜ் ஹோட்டலுக்குப் புறப்பட்டுச் சென்றார். இன்று மாலை அவர் திஹார் சிறைக்குச் சென்று கனிமொழியை சந்திக்கவுள்ளார்.

கருணாநிதியுடன் முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன் ஆகியோரும் வந்துள்ளனர்.

கருணாநிதியின் துணைவியான ராசாத்தி அம்மாள் ஏற்கனவே டெல்லி வந்து முகாமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to கருணாநிதி திகார் சிறைச்சாலைக்கு சென்றடைந்தார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com