எத்தனை சிறைகளில் என்னைத் தள்ளினாலும் அரசியலில் நான் கொண்ட இலக்கை அடையாது ஓயமாட்டேன் என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சூளுரைத்துள்ளார்.
வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பான வழக்கின் தொடா்விசாரணையின் ஐந்தாவது நாளான நேற்று அவர் சாட்சியமளிக்கையிலேயே மேற்கண்டவாறு சூளுரைத்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ போலியான நாட்டுப்பற்றை வெளிக்காட்டிக் கொண்டு செயற்பட்ட போதிலும், நாட்டைக் குறித்தோ நாட்டு மக்களைக் குறித்தோ கிஞ்சித்தும் அக்கறையற்றவர். அவரது செயற்பாடுகளும் நாட்டின் முன்னேற்றத்துக்கு உகந்தவையல்ல.
ஜனாதிபதியும் அவரது தலைமையிலான அரசாங்கமும் எந்தவிதமான செயற்திறனும் அற்றவர்கள். ஊழலும் மோசடியும் தான் இந்த அரசாங்கத்தின் சாதனைகள். பொதுமக்களின் நலன் கருதி எந்தவொரு செயற்திட்டத்தையும் இந்த அரசாங்கம் முன்னெடுத்தது கிடையாது.
அதன் காரணமாகத் தான் ஊழல் மற்றும் மோசடியின் பிடியிலிருந்து இந்த நாட்டை மீட்டெடுக்கவே நான் அரசியலில் களமிறங்கியுள்ளேன். இந்த நாட்டைப் பிடித்தாட்டிக் கொண்டிருந்த பயங்கரவாதத்தை ஒழிக்கும் போருக்குத் தலைமை தாங்கி அதனை வெற்றிகொண்டது போலவே அரசியலில் நான் எந்த நோக்கத்தில் குதித்துள்ளேனோ அந்த இலட்சியத்திலும் வெற்றி பெறுவேன் என்றும் அவர் தனது சாட்சியத்தின் போது தொடர்ந்தும் குறிப்பிட்டார்.
எத்தனை சிறைகளில் என்னைத் தள்ளினாலும் அரசியலில் என் இலக்கை அடையாது ஓயமாட்டேன்: பொன்சேகா
பதிந்தவர்:
தம்பியன்
27 May 2011



0 Responses to எத்தனை சிறைகளில் என்னைத் தள்ளினாலும் அரசியலில் என் இலக்கை அடையாது ஓயமாட்டேன்: பொன்சேகா