Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை முன்னிறுத்தி, பிரான்சின் முதன்மைக் கட்சிகளில் ஒன்றாகவும் தற்போது எதிர்க்கட்சியாக இருக்கின்ற (PSF) சோசலிச கட்சிப் பிரதிநிதிகளுக்கும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று மே-15 புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

பிரான்சு நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் சோசலிச கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிநிதி மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலசந்திரன் மக்கள் பிரதிநிதி சுபா குருபரன் உள்துறை அமைச்சு செயலர் ரமேஸ் பத்மநாதன் பங்கெடுத்திருந்தனர்.

இந்தச் சந்திப்பு குறித்து நாதம் ஊடகசேவைக்கு கருத்துரைத்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலசந்திரன் அவர்கள்,

தமிழர்களுடைய அரசியல் நிலைப்பாடு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டதுடன், சிறிலங்கா அரசின் இனவாதப் பிடிக்குள் சிக்குண்டு தமிழினம் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள் குறித்தும் எடுத்துக் கூறப்பட்டதாக தெரிவித்தார்.

இதேவேளை ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை பரிந்துரைத்துள்ள சர்வதேச விசாரணை மற்றம் அனைத்துலக பொறிமுறை ஆகிய பிரதான விடயங்களை ஐ.நா. சபை நடைமுறைப்படுத்த பிரான்சு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமென கோரப்பட்டதோடு இதற்கு வழிகோலும் முகமாக பிரான்சு நாடாளுமன்றத்தில் இது குறித்து விரிவான விவாதத்தை முன்னிறுத்துமாறும் கேட்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

நாதம் ஊடகசேவை
தகவல்துறை அமைச்சகம்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

0 Responses to பிரான்சின் சோசலிச கட்சிக்கும் தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com