Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வரலாற்று நாயகர்களான வீரத்தளபதிகள், மற்றும் அவர்கள் வரிசையில் விடுதலைக்கு உரம் சேர்த்து வித்தாகி வாழும் வீரமறவர்களை நினைவுகொள்ளும் வீரவணக்க நிகழ்வு பிரித்தானியாவில் நடைபெறவுள்ளது.

28-05-2011 சனிக்கிழமை மாலை லண்டன் கொலிண்டேல் பகுதியில் அமைந்துள்ள சென் மெத்தீஸ் ஆலய மண்டபத்தில் மாலை 6 மணிமுதல் 9 மணிவரை நடைபெறவுள்ளது.

சரித்திர நாயகன் பிரிகேடியர் பாலராஜ், மற்றும் பிரிகேடியர் சொர்ணம், பிரிகேடியர் சசிக்குமார், கேணல் ரமணன், லெப்.கேணல் ராதா, லெப்.கேணல் நவம் ஆகிய வீரத்தளபதிகள் உட்பட இம்மாதத்தில் வீரச்சாவைத்தழுவிய மாவீரர்களை நினைவுகொள்ளும் வீரவணக்க நிகழ்வு இடம்பெறவுள்ளதால் அனைத்து பிரித்தானியத் தமிழர்களையும் வருகை தந்து இம் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இடம்:

ST.MATTHIAS PAROCHIAL CHURCH HALL
Rushgrove Avenue,
Colindale,
NW9 6QY

நேரம்: 6:00pm to 9:00pm
காலம்: 28-05-2011

0 Responses to பிரித்தானியாவில் வரலாற்று நாயகர்களின் வீரவணக்க நிகழ்வு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com