Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மே - 18 தமிழீழ தேசிய துக்க நாளில் நியூ யோர்க்கில் உள்ள ஐ.நாவிற்கு உயர்பீடத்திற்கு முன்னால் அமெரிக்க - கனடிய தமிழர்கள் அணிதிரண்டனர்.

முள்ளிவாய்க்கால் பேரலத்தை நினைந்தும் - ஐ.நா நிபுணர் குழவின் பரிந்துரைகளை முன்னிறுத்தியும் இந்த ஒன்றுகூடல் இடம்பெற்றது.

ஒன்றுகூடலின் ஒர் அங்கமாக ஐ.நா அதிகாரிகளுக்கும் தமிழர் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்றும் ஐ.நாவின் இராஜதந்திர தொடர்பாடல் காரியலத்தில் இடம்பெற்றிருந்தது.

ஐ.நாவின் அரசியல் விவாகார குழுவின் பிரதிநிதி ஒருவர் பங்கெடுத்திருந்த இந்தச் சந்திப்பின் ஒளிப்படத்தை வெளியிட வேண்டாம் என கேட்கப்பட்டதாக Innercity Press தனது செயதிக் குறிப்பில் வெளியிட்டுள்ளது

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தலைமையில் இடம்பெற்றிருந்த இந்தச் சந்திப்பில், தமிழர்களுடைய நிலைப்பாடு குறித்து தெளிவாக எடுத்துரைக்கப் பட்டதோடு, கையெழுத்துப் போராட்டத்தின் குறியிட்டுப் பத்திரமும் கையளிக்கப்பட்டது.

இதேவேனை இந்த ஒன்றுகூடலுக்கு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உறுதுணை வழங்க ஏழு அமெரிக்க - கனடிய தமிழர் அமைப்புக்கள் கூட்டிணைந்து இந்த நிகழ்வினை நடாத்தியுள்ளனர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கதத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன், ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ் பிரதிநிதி பேராசிரியர் தசரதா செட்டி, கனடிய தமிழ் கொங்கிரஸ் பேச்சாளர் டேவிட் பூபதிப்பிள்ளை, USTPAC அமைப்பின் தலைவர் பேராசிரியர் எலியஸ் ஜெயராஜா உட்பட பல பிரதிநிதிகள் இந்நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர்.

massachusetts மாநில பிரதிநிதி Jason Lewis , Illinois மாநில பிரநிதிநி Danny Davis ,தமிழகத்தில் இருந்து நாடுகடந்த தமிழீழ அரச தோழமை மையத்தில் இருந்து பேராசிரியர் சரஸ்வதி இராஜேந்திரன், திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆகியோரது செய்திகளும் வாசிக்கப்பட்டன.

0 Responses to நியூ யோர்க் ஐ.நா முன்றலில் அணிதிரண்ட தமிழர்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com