Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சமீபத்திய தேர்தலில் பெரும்வெற்றிபெற்றும், தமிழ் நாடு முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கும் செல்வி ஜெயலலிதாவை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திருப்பும் நடவடிக்கையில் முழு மூச்சாக இறங்கியுள்ளது இந்திய உளவு நிறுவனமன றோ அமைப்பு. அதன் முதல் கட்ட வேலைகளை அவர்கள் ஆரம்பித்துள்ளனர். இதன் ஒரு அங்கமாக, இலங்கையில் அரச படைகளின் பிடியில் இருக்கும் கே.பியை சந்தித்து ஒரு நேர்காணல் எடுக்கப்பட்டுள்ளது. இந்தியத் தொலைக்காட்சிக்காக அது எடுக்கப்பட்டது எனக் கூறப்பட்டாலும், அந்த நேர்காணலில் கேட்கப்படும் கேள்விகளும் அதற்கு கே.பி கூறும் பதில்களும், மிகவும் ஆபத்தமானவை. இதன் மூலம் ஜெயலலிதாவை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திசை திருப்ப றோ முயற்சிப்பது தெள்ளத் தெளிவாகியுள்ளது.

விடுதலைப் புலிகளே ராஜீவ் காந்தியைக் கொண்றதாகக் குறிப்பிடும் கே.பி அதற்காக மன்னிபுக் கோருகிறார். பின்னர் அவர் குறிப்பிடுகையில் ஜெயலலிதா மீது புலிகள் ஆத்திரம் அடைந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு அதன் காரணமகவே Z ரக பாதுகாப்பு மத்திய அரசால் வழங்கப்பட்டதாகவும், சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் புலிகள் ஜெயலிதாவையும் சுட்டுக்கொண்றிருபார்கள் என்றும் கே.பி கருத்துத் தெரிவித்துள்ளார். புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வலது கரம் தான் தான், என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்துரைத்துள்ள கே.பி, தேசியத்தலைவர் தன்னை ஒரு அரசன் போலக் கருதியதாகவும், அதற்கு தமிழ் நாட்டு அரசியல்வாதிகளே காரணம் எனவும் கூறியுள்ளார். புலிகள் ஜெயலலிதாவை கொல்ல திட்டமிட்டிருந்தர் எனக் கூறி, அவரை ஈழத் தமிழ் மக்களையும் அன்னியப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது இந்திய உளவுத்துறை. இதற்கு கே.பியை ஒரு பகடைக்காயாக பயன்படுத்த அவர்கள் தவறவும் இல்லை!

அதிர்வு

1 Response to ஜெயலலிதாவை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திருப்பும் நடவடிக்கை றோவால் ஆரம்பம்!

  1. ivanellam ean uyiroda irukkanm

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com