Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக காவல்துறை இயக்குநருக்கு செந்தமிழன் சீமான் புகார் மனு அனுப்பியுள்ளார்.

அந்த மனுவில், ‘’நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறேன்.

எங்களுடைய கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சுபா. முத்துக்குமார் என்பவர் பணியாற்றி வந்தார்.

எங்களுடைய கட்சியானது இலங்கை வாழ் தமிழர்களுக்காகவும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் நலனுக்காக போராடி வருகிறது.

கடந்த 15.2.2011 அன்று இரவு சுமார் 9.30 மணியளவில் முத்துக்குமாரும் வழக்கறிஞர் போத்தியப்பன் அவர்களும் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் உள்ள தாஜ் பழக்கடையில் நின்று கொண்டிருந்த போது மூன்று நபர்கள் சுபா. முத்துக்குமாரை தலையிலும் வயிற்றிலும் வெட்டி கொலை செய்தனர்.

இதில் சம்பவ இடத்திலேயே சுபா. முத்துக்குமார் உயிர் இறந்தார். மேலும், வழக்கறிஞர் போத்தியப்பன் மேற்கண்ட நபர்களால் தாக்கப்பட்டு பின்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

சுபா. முத்துக்குமார் படுகொலை செய்வதற்கு இரண்டு தினம் முன்பு புதுக்கோட்டையில் உள்ள வடகாடு என்ற கிராமத்தில் சுபா. முத்துக்குமார் மீது அவதூறு பரப்பும் துண்டறிக்கைகள் வீசப்பட்டிருந்தன. மேலும் அதில் இந்த கருப்பு ஒனாய் வெந்து நொந்து சாவான் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே மேற்கண்ட சுபா. முத்துக்குமாரை கொலை செய்த குற்றவாளிகள் எல்லாம் திட்டமிட்டு இந்த துண்டறிக்கையை வீசியுள்ளனர். மேலும், இந்த கொலையாளிகளால் பயன்படுத்திய கார் அன்றைய மறுதினம் காரைக்குடி அருகே காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த காரில் இரத்த கரையுடன் இருந்த ஆயுதங்கள் மற்றும் சில தடய பொருட்களை காவல்துறை கைப்பற்றியது. மேலும், அந்த காரில் பதிவாகிய கைரேகை நிபுணர்களால் சேகரிக்கப்பட்டுள்ளது.

16.2.2011 அன்று முதல் தகவல் அறிக்கையை புதுக்கோட்டை நகர காவல் நிலையம் பதிவு செய்து இது நாள் வரை குற்றவாளிகளை பிடிக்கவில்லை.

இந்த கொலையை நேரில் கண்ட சாட்சிகளான வழக்கறிஞர் போத்தியப்பன் மற்றும் கடையில் இருந்தவர்களை காவல்துறை சரியாக விசாரிக்கவில்லை. மேலும், சுபா. முத்துக்குமார் படுகொலை செய்யப்பட்டு 100 நாட்களுக்கு மேலாகியும் குற்றவாளிகளை காவல்துறை கைது செய்யவில்லை.

மேலும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கான எந்தவித முயற்சியும் செய்யவில்லை.

சுபா. முத்துக்குமார் படுகொலை செய்யப்பட்டு இது நாள் வரையில் புதுக்கோட்டை காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமலும் குற்றவாளிகளை கைது செய்யாமலும் இருக்கின்றனர்.

எனவே இவ்வழக்கினை மத்திய அரசின் சிறப்பு புலனாய்வு துறையான சிபிஐ விசாரனைக்கு உத்தரவிட்டு உண்மை குற்றவாளிகளை சட்டத்திற்கு முன் நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

0 Responses to தமிழக காவல்துறை இயக்குநருக்கு செந்தமிழன் சீமான் புகார் மனு அனுப்பியுள்ளார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com