Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பொஸ்னியா- சேபியர்களுக்கு எதிராக போர் நடைபெற்றவேளை 8,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொஸ்னியர்களைக் கொலைசெய்து போர் குற்றம் புரிந்த ரட்கோ மிலாடிஜ் என்னும் இராணுவத் தளபதி தற்போது கைதாகியுள்ளார்.

1991ம் ஆண்டு முதல், இவர் மீது இன அழிப்புக் குற்றமும், போர் குற்றங்களும் சுமத்தப்பட்டது. 20 ஆண்டுகளாக புலம்பெயர் பொஸ்னியர்கள் இவரைக் கைதுசெய்யவேண்டும் என அழுத்ததைக் கொடுத்து வந்தனர். மெதுவாக ஐரோப்பிய ஒன்றியமும், பின்னர் ஏனைய நாடுகளும் செபனீசியாவில் இளைக்கப்பட்ட கொடுமைகளை ஏற்றுக்கொண்டது. பல நாடுகளில் கடந்த 20 வருடமாக இவர் தேடப்பட்டு வந்தார். அமெரிக்கா தனது புலனாய்வைப் பயன்படுத்தி இவரைத் தேடிவந்தது. ஆனாலும் இவர் தலைமறைவாகவே வாழ்ந்து வந்தார்.

ஒரு நகரத்தையே தனது படைகளைக் கொண்டு சூழ்ந்து, அதனை 44 மாதங்களாக சுற்றிவளைத்து, குடி நீர், மின்சாரம், உணவு என்பனவற்றைத் தடைசெய்து, அன் நகரம் மீது ஷெல் தாக்குதலையும் மேற்கொண்டார் ரட்கோ மிலாடிஜ். செபனீட்சியா என்னும் இடத்தில் சுமார் 8,000 பொஸ்னியர்கள் கொல்லப்பட்டனர். சமீபத்தில் அதனை உதாரணம் காட்டியே இலங்கைப் பிரச்சனையும் சனல் 4 தொலைக்காட்சியில் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந் நிலையில் இன்று சேபியாவில் அருகே உள்ள கிராமம் ஒன்றில், இவரை சேபியப் பொலிசார் கைதுசெய்துள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக இலங்கை கலக்கத்தில் உள்ளது. காரணம் என்னவெண்றால், ரட்கோ மிலாடிஜை சர்வதேசம் தூற்றி வந்தாலும், அவர் கைதுசெய்யப்படமாட்டார் என இலங்கை உட்பட பல நாடுகள் எண்ணி வந்தது. ஆனால் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள ரட்கோ மிலாடிஜ் மீது மரபணுப்பரிசோதனை நடத்தப்படுவதாவும், உறுதிசெய்யப்பட்ட பின்னர் அவர் நேரடியாக நெதர்லாந்தில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு கொண்டுசெல்லப்படவுள்ளார் என்றும் பி.பி.சி செய்திச் சேவையூடாக அதிர்வு இணையம் அறிகிறது.

பொஸ்னியர்களுக்கு இளைக்கப்பட்ட கொடுமைகளுக்கு சுமார் 20 ஆண்டுகள் கழித்தே நீதி கிடைத்திருக்கிறது என பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இன அழிப்பு நடைபெற்று 20 ஆண்டுகள் ஆணாலும் தமது முன்னெடுப்புகளை இவர்கள் ஒருபோது கைவிட்டதில்லை. அதனை தமிழர்களும் பிந்தொடரவேண்டும்.

இலங்கையில் பாரிய இன அழிப்பு ஒன்று நடைபெற்று 2 வருடங்களே பூர்த்தியாகியுள்ள நிலையில், பலரும் சோர்ந்துபோய் உள்ளனர். தமிழர்கள் அனைவரும் இதனைப் பார்த்து கற்றுகொள்ளவேண்டியது நிறையவே உள்ளது எனலாம் ! 8000 பேரைக் கொண்றது ஒரு இன அழிப்பாகப் பார்க்கப்படும் இடத்தில் 40,000 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டது எவ்வாறு நோக்கப்படவேண்டும், இல்லையேல் எவ்வாறான அழுத்ததை புலம்பெயர் தமிழர்கள் பிரயோகிக்கவேண்டும் தமிழ் அமைப்புகள் தீர்மானிப்பது நல்லது.


அதிர்வு

0 Responses to ரட்கோ மிலாடிஜ் கைது: மரபணுப் பரிசோதனை நடக்கிறது - கலக்க நிலையில் இலங்கை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com