Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை சுயாதீன பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும். அதற்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புசபை கோரியுள்ளது.

இலங்கையில் போர் முடிவடைந்த 10 நாட்களில் அதாவது 2009 ம் ஆண்டு மே 27 ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகம், பிரேரணை ஒன்றை நிறைவேற்றியது. அதில் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் அமைதி குறித்து வலியுறுத்தப்பட்டது.

எனினும் இரண்டு தரப்பாலும் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் தொடர்பில் அந்த பிரேரணையில் எவ்வித கருத்துக்களும் முன்வைக்கப்படவில்லை என்று மன்னிப்பு சபை சுட்டிக்காட்டிள்ளது.

தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு இலங்கையின் இறுதிப்போரின் போது போர்க்குற்றங்கள் இடம்பெற்றிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் இதற்கு எதிரான சர்வதேச விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகம் தமது ஆதரவை வழங்கவேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது.

2009 ஆம் இலங்கையின் அரசாங்கத்தினால் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட படை நடவடிக்கையின் போது சுமார் 3 லட்சம் மக்கள் முற்றுகையிடப்பட்டனர்.

இதன் போது நடத்தப்பட்ட தாக்குதலில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பலர் காயங்களுக்கு உள்ளாகினர்.

இந்தநிலையில் பான் கீ மூனின் நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் போர்க்குற்ற்ம் நிகழ்ந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் சர்வதேச விசாரணை பொறிமுறை ஏற்படுத்தவேண்டும் என்று பான் கீ மூனின் நிபுணர் குழு வலியுறுத்தியுள்ளது.

எனவே பான் கீ மூன் , இலங்கையின் போர்க்குற்றங்களை விசாரணை செய்ய சர்வதேச பொறிமுறை ஒன்றை ஏற்படுத்தவேண்டும்.

அத்துடன் அதற்காக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆதரவையும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது.

0 Responses to போர்குற்ற விசாரணைக்கு மனித உரிமை ஆணைக்குழுவின் ஆதரவு பெறப்படவேண்டும்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com