பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரில் மே18 நினைவு நாள் உண்ணாநிலைப் போராட்டமாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.
காலை8மணியளவில் நீர் கூட அருந்தாமல் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாநிலைப்போராட்டம் மாலை 5மணியளவில் பிரஞ்சுப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஆர்னோல்ட் யுங் அவர்களின் உதவியாளரும், ஸ்ராஸ்பூர்க் நகர உதவி மேயருமான திரு எறிக் எல்குபி அவர்களினால் பழரசம் கொடுத்து முடித்து வைக்கப்பட்டது.
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் நினைவாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கமும் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து எறிக் எல்குபி அவர்கள் உரையாற்றுகையில் தொடர்ந்தும் அமைதியான வழியில் போராட்டங்களை நடாத்துவதின் மூலமே தமிழ் மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுக் கொள்ளமுடியும் எனத் தெரிவித்திருந்தார்.
நாடுகடந்த அரசின் ஜனநாயக அணியின் உறுப்பினர் சரவணமுத்து சசிகுமார் அவரிகளினால், ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பியத் தமிழர் ஒன்றியத்தின் சார்பில் பிரஞ்சு அரசுத் தலைவர் அவர்களுக்கு, இலங்கையில் நடைபெற்ற இன அழிப்புத் தொடர்பாக உடனடி சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் எனவும், அதற்கு பிரன்ஸ் அரசு உடனடியாக அழுத்தம் கொடுக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலுயுறுத்திய மனு, பிரஞ்சுப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஆர்னோல்ட் யுங் அவர்களின் ஊடாக அனுப்பிவைக்கப்பட்டது.



0 Responses to பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரில் மே18 நினைவு நாள்