பயங்கரவாத்தையும் விடுதலைப் போராட்டத்தையும் சர்வதேசம் பிரித்துப் பார்க்கத் தெரியாத காரணத்தால் தான் முள்ளிவாய்க்காலில் எங்கள் உறவுகளான நமது போராளிகளும் பொதுமக்களும் குண்டு வீசி குதறப்பட்டனர்.அவர்களை நாங்கள் இழந்து அழுதபடியுள்ளோம். தமிழீழ தேசிய துக்க தினம் தொடக்க நிகழ்வில் துணைப் பிரதமர் ராம் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.
தங்கள் இன்னுயிர்களை நமது தாயக விடுதலைக்காக தியாகம் செய்த அந்த உயர்ந்த உறவுகளுக்காக நாம் துக்கதினத்தை அனுஸ்டிக்க வேண்டிய மிக அவசியம். அத்துடன் தமிழீழத்தை அடையும் நாடுகடந்த தமிழீழ அரசினது செயற்பாடுகளிலும் நாம் தீவிரமாக பங்குபற்ற வேண்டும்.
இவ்வாறு நேற்று மாலை கனடாவின் ஸ்காபுறோ சங்கமம் விழா மண்டபத்தில் நடைபெற்ற மேற்படி நினைவேந்தல் தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய நாடு கடந்த தமிழீழ அரசின் துணைப் பிரதமர் திரு ராம் சிவலிங்கம் தெரிவித்தார்.
அங்கு உரையாற்றிய நாடு கடந்த தமிழீழ அரசின் கடனாப் பிரிவின் முக்கிய செயற்பாட்டாளரான திரு ரோய் உரையாற்றுகையில்
முள்ளிவாய்க்காலில் நமது மக்களையும் போராளிகளையும் குறிவைத்து கொடிய இராணுவத் தாக்குதல்களும் குண்டு வீச்சுக்களும் நடத்தப்பட்ட போது நாங்கள் வாழும் புலம் பெயர்ந்த நாடுகளில் வீதிகளில் இறங்கி நாங்கள் அந்தந்த நாட்டு அரசாங்கங்களை கெஞ்சினோம். அழுதோம், மன்றாடினோம்.
இந்த நாடுகளின் அரசாங்கள் எங்கள் குரலுக்கு செவிமடுக்காமல் இருந்தபடியால்தான் நமக்கென்று நாடு கடந்த அரசாங்கத்தை ஸ்தாபித்தோம் என்றார்.
இங்கே காணப்படும் படங்களில் திரு ரோய் உரையாற்றுவதையும், பொதுமக்கள் அமர்ந்திருப்பதையும் காணலாம்.
தொடர்ந்து நடக்கவுள்ள நிகழ்வுகள் பற்றி அறிவதற்கு 416 291 7474 என்ற இலக்கத்தை அழைக்கவும்.



0 Responses to பயங்கரவாத்தையும் விடுதலைப் போராட்டத்தையும் பிரித்துப் பார்க்கத் தெரியாத சர்வதேசம்