Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜெனீவாவில் இடம்பெற்றுவருகின்ற ஐ.நாவின் மனித உரிமை சபையின் கூட்டத் தொடரில், நேற்று ''இலங்கையின் படுகொலைக்களம்'' எனும் ஆவண திரைப்ப்படம் திரையிடப்பட்டு எல்லோர் மனதையும் கலங்கவைத்தது.

இது தொடர்பாக, கூட்டத் தொடரில் பங்கெடுத்திருக்கும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகளில் ஒருவரான சுகன்யா புத்திசிகாமணியிடம் ஓர் உரையாடல்.





1. கேள்வி: திரையிடப்பட்ட ஆவணப்படம் பற்றிய ஒரு குறிப்பைத் தாருங்கள்?

பதில்: ஆதரவுடன் பிரித்தானியாவின் சனல் 4 தொலைகாட்சின் ஆவணப்படமாக அது அமைந்திருந்தது. அண்ணளவாக 50 நிமிடங்கள் ஓடக்ககூடியதாக அமைந்திருந்தது அந்த ஆவணப்படம். ஓரு அரசுக்குரிய கட்டுமானங்களுடன் தமிழீழ விடுதலைப் புலிகளால் தமிழீழம் எவ்வாறு நிர்வகிக்கப்பட்டிருந்தது என்பதும், இன்று முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன், தமிழீழம் எவ்வாறு உள்ளது என்பதாக ஆவணப்படக் காட்சிகள் விரிகின்றன. சிறிலங்கா அரசினால் பாதுகாப்பு வலயங்கள் என அறிவிக்கப்பட்டு, தஞ்சமடைந்து பொது மக்கள், சிறிலங்கா இராணுவம் எறிகணைகள; கொன்று குவிக்கப்பட்ட விடயங்கள். பிரதானமாக மருத்தவமனைத் தாக்குதலகள் தகுந்த ஆவணங்களுடன் பதிவு காட்சிகளாக விரிந்தன.

அத்தோடு வெள்ளைக் கொடியுடன் சென்றவர்கள் படுகொலை செய்யப்பட்டமை ,கேணல் ரமேஷ், இசைபிரியாவின் கொலை மற்றும் நிராயுத பாணிகளாக போராளிகள் படுகொலை செய்யப்படுகின்றமை உட்பட அதிர்ச்சியும் கவலையும் தரும் பல விடயங்கள் காட்சிகளாக ஆவணப்படத்தில் அமையப் பெற்றிருந்தன.

2. கேள்வி: ஆவணப்படத்தில் இதுவரை வெளிவராத காட்சிகள் உள்ளடக்கப் பட்டிருந்தனவா?

பதில்: ஓம்! அதில், பிரதானமாக பெண் போராளிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு, அவர்களின் கைகள், வாய், கண்கள் கட்டப்பட்ட நிலையில், சிறிலங்கா இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படுகின்ற, மிக மோசமான காட்சிகளாக அது அமைந்திருந்நது.

3. கேள்வி: திரையரங்கில் யார் யார் எல்லாம் இருந்தார்கள்?

பதில்: ஐ.நாவுக்கான நாடுகளின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், மனித உரிமை அமைப்புக்கள், மற்றும் ஐ.நா அதிகாரிகள். முக்கியமாக சிறிலங்காவின் ஐ.நாவுக்கான பிரதிநிதிகள்.

4. கேள்வி: ஆவணப்படத்தினைப் பார்வையிட்ட பின்னர் அரங்கம் எப்படியிருந்தது?

பதில்: அரங்கம் சுமார் பத்து நிமிடங்களுக்கு அமைதியாக இருந்தது. பலரது கண்களில் கண்ணீர் காணப்பட்டது. எல்லோர் முகத்திலும் ஒருவித கவலை, அதிர்ச்சி படர்ந்திருந்தது.
பின்னர், தமிழ் மக்கள் மீது ஒரு இனப்படுகொலை நடத்திருக்கின்றது என்பதனை பலரும் உரையாடிக் கொண்டதை கணக்கூடியதாகவும் இருந்தது.

5. கேள்வி: ஆவணப்படம் குறித்தான சிறிலங்கா தரப்பின் நிலைப்பாடு எப்படியிருந்தன?

பதில்: பெரும் நெருக்கடிக்குள் சிறிலங்கா அரச தரப்பினர் உள்ளாகியிருந்தனர். ஐ.நாவுக்கான நாடுகளின் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு, ஒரு தெளிவான பதிலை முன்வைக்க முடியாது சிறிலங்கா தரப்பினர் நிலைதடுமாறியிருந்தனர்.

உண்மையில் இந்த ஆவணப்படம், ஐ.நா மனித உரிமை சபையின் கூட்டத் தொடருக்குள் மட்டுமல்ல, அதற்கு அப்பாலும், சிறிலங்கா அரசுக்கு கடும் நெருக்கடியையும், அழுத்தத்தையும் கொடுக்கப் போகின்றது என்பது மட்டும் உறுதி.

0 Responses to அரசுக்கு கடும் நெருக்கடியைக் கொடுக்கப் போகும் சனல்4 வெளியிட்டுள்ள ஆவணக் காட்சி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com