நிபுணர் குழு அறிக்கை விடயத்தில் இந்தியாவின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கான விடயத்தில் இந்தியாவைச் சமாளிக்க இலங்கை எடுத்துக் கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்துள்ளன.
முன்னதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் இந்திய விஜயத்தின் போது இலங்கையின் எதிர்பார்ப்புக்கு மாற்றமாக இந்தியா கடும் அழுத்தங்களைப் பிரயோகித்திருந்தது. அது மாத்திரமன்றி அமைச்சர் பீரிஸின் விஜயத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையிலும் அதனை உள்ளடக்கியிருந்தது.
அதன் பின் இந்தியாவைச் சமாளித்து அதன் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் முயற்சியில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேரடியாக களமிறங்கினார். ஆயினும் அவரது முயற்சி வெற்றிபெறாத நிலையில் போன வேகத்தில் இந்தியாவில் இருந்து திரும்பி வரநோ்ந்தது.
கடைசியாக அதற்கான முயற்சியில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவும் இறங்கிப் பார்த்துள்ளார். கடந்த வார இறுதியில் இடம்பெற்ற இந்தியத் தூதுவர் அசோக் காந்தாவின் மகனுடைய திருமண வைபவத்தில் கலந்து கொள்ளும் சாக்கில் இந்தியா சென்றிருந்த அவர் அதன் போது இந்தியாவின் முக்கியஸ்தர்களைச் சந்திப்பதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.
அதன் போது இந்திய ராஜதந்திரிகள் பலரையும் சந்தித்து உரையாடியிருந்ததுடன், இந்தியாவுக்கு இணக்கமான முறையில் பேசி இந்திய ஆதரவைப் பெறவும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
ஆயினும் முன்னதாக அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ் மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்குக் கிடைத்த அதே பதிலே பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கும் கிடைத்திருப்பதால் அவரும் ஏமாற்றத்துடனேயே திரும்ப நோ்ந்துள்ளது.



0 Responses to இந்தியாவைச் சமாளிக்கும் இலங்கையின் அனைத்து முயற்சிகளும் தோல்வி!