Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வன்னியில் சர்வதேச பத்திரிகையாளரை விரட்டிவிட்டே இப்படியான கொலைக்களம் நிகழ்த்தப்பட்டிருப்பதாக சனல் 4 நேற்று தெரிவித்தது. போரின் ஒவ்வொரு நகர்வையும் சற்லைற் படங்கள் தெட்டத் தெளிவாகக் காட்டிக் கொண்டிருப்பதையும் அது சுட்டிக்காட்டியது.

போரை நிறுத்த ஒரு நாள் இரண்டு நாள் அல்ல பல மாதங்கள் ஐ.நாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் ஐ.நா மன்றே பதிலின்றி உறைந்துபோய்க் கிடந்துள்ளது. ஐ.நா செயலாளரோ சிறீலங்கா போய் 15 நிமிடங்கள் பார்வையிடும் பணியோடு அங்கிருந்து போய்விடுவதையும் அது கோடு போட்டுக் காட்டுகிறது.

விடுதலைப் புலிகளுக்கு பயங்கரவாத பட்டம் கட்டிய உலக சமுதாயம் சிறீலங்காவுக்கு இனி என்ன பட்டம் கட்டப்போகின்றன. இதுபோன்ற செயலுக்கு சர்வதேச பலத்தை பயன்படுத்த சிறீலங்காவுக்கு உரிமை வழங்கியது யார்..? இதுதானா சர்வதேச சட்டங்களையும் நீதியையும் மதிக்கும் ஒழுங்கு..? என்ற துணிச்சலான கேள்வியை முன் வைக்கிறது சனல் 4.

ஒவ்வொரு குடிமகனும் ஐ.நாவை நோக்கி நீதிக்கான கேள்வியைக் கேட்க புது வழியை திறந்துவிட்டுள்ளது சனல் 4 அலைவரிசை நிகழ்ச்சி. பான் கி மூனின் தலைமையில் ஐ.நா சந்தித்துள்ள இந்தப் பேரவலமும், அவமானமும் வரலாற்றில் என்றுமே அழிக்க முடியாத களங்கமாக மாறியிருக்கிறது. ஐ.நா மன்று அவசர அவசரமாக தொழிற்பட்டு இந்தக் களங்கத்தை துடைக்க வேண்டிய பருவம் வந்துவிட்டது. குற்றம் செய்தவருக்கு மட்டும் தண்டனை, இதில் ஐ.நா பின்வாங்கினால் அந்தத் தாபனத்தின் இருத்தலே கேள்விக்குறியாகிவிடும்.

0 Responses to சனல் 4 இன் காணொளியால் வெட்கித் தலை குனியும் ஐ.நா மன்று

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com