ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் சிறிலங்கா அரசின் பரப்புரைகளை முறியடிக்க, பங்கெடுத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரிதிநிதிகள், போர்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை முன்னிறுத்தி ஐ.நா உயர் அதிகாரிகள் - நாடுகளின் தூதுவர்கள் - மனித உரிமை அமைப்பு பிரதிநிதிகள் என பல்வேதரப்பட்டவர்களின் ஆதரவை பெற முயற்சிக்கின்றனர்.
ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை மையப்படுத்தி, உலக நாடுகள் - மனித உரிமை அமைப்புக்கள் - அரசசார்பற்ற நிறுவனங்கள் ஆகியன, தங்களது கருத்துக்களை கூட்டத் தொடரில் முன்வைத்து வருகின்றன.
இந்நிலையில், கூட்டத் தொடர் இடம்பெறும் காலப்பகுதி முழுவதும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தொடர்சியாக பங்கெடுக்கவுள்ளதாக கூட்டத்தொடரில் பங்கெடுத்திருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நாவுக்கான அரசியல் வெளிவிகார அமைச்சுப் பிரதிநிதி முருகையா சுகிந்தன் தெரவித்துள்ளார்.
இதேவேளை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியூரைஞர் குழுப் பிரதிநிதியான கலாநிதி கரன் பார்க்கர் அம்மையார் அவர்களும், கூட்டத் தொடரில் பங்கெடுத்திருப்பதாக, அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழ்மக்கள் மீது சிறிலங்கா இழைத்த போர்குற்றங்கள் - மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்கு ஒரு சர்வதேச விசாரணையை முன்னிறுத்தி ஐ.நா உயர் அதிகாரிகள் - நாடுகளின் தூதுவர்கள் - மனித உரிமை அமைப்பு பிரதிநிதிகள் என பல்வேதரப்பட்டவர்களின் ஆதரவை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் திரட்டவுள்ளனர்.
ஜெனீவாவில் உள்ள ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் மே-30 முதல் யூன்-17 வரை இடம்பெறுகின்றது
நாதம் ஊடகசேவை
தகவல்துறை அமைச்சகம்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
போர்க்குற்ற விசாரணையை முன்னிறுத்தி பல்வேறு நாட்டு உறுப்பினர்களின் ஆதரவை பெற தமிழீழ அரசின் பிரதிநிதிகள் முயற்சி
பதிந்தவர்:
தம்பியன்
01 June 2011



0 Responses to போர்க்குற்ற விசாரணையை முன்னிறுத்தி பல்வேறு நாட்டு உறுப்பினர்களின் ஆதரவை பெற தமிழீழ அரசின் பிரதிநிதிகள் முயற்சி