Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புரட்சியால் உருவான கியூபா போன்ற நாடுகளின் பச்சை துரோகமும், பொதுவுடைமை பேசும் நாடுகளின் தவறான பார்வை, இந்தியா வழங்கிய நிதி, ஆயுதம், இராணுவ உதவி ஆகியவையே ஈழ போராட்டத்தின் வெற்றிக்கு தடையாக அமைந்து விட்டன என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பந்தலடியில், இலங்கை அரசின் யுத்த குற்றவாளியென கூறும் ஐ.நா. அறிக்கையை விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்:-

ஐரோப்பிய நாடுகள் இலங்கைக்கு பொருளாதார தடை விதித்து வரிவிலக்கு, ரத்து செய்வது போன்ற தீர்மானங்களை நிறைவேற்றி இருப்பதன் மூலம் நம்பிக்கை ஒளி ஏற்றப்பட்டுள்ளது.

ஈழபிரச்சினையை தீர்க்க பல சந்தர்ப்பங்கள் கிடைத்தும் திமுக தலைவர் கருணாநிதி சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. ஈழ பிரச்சினையில் துரோகம் செய்ததால் தேர்தல் முடிவின் மூலம் மக்களால் தி.மு.க. ஆட்சி தூக்கி எறியப்பட்டுள்ளது.

ஈழப்பிரச்சினை தீர்வுக்கு மத்திய அரசு தான் பொறுப்பு என திமுக தலைவர் கருணாநிதி தட்டி கழித்தார். அதே நிலைபாட்டை ஒத்து தான் அ.தி.மு.க.வின் முடிவும் இருக்கிறது என்பதை சட்டபேரவையில் ஆளுனர் உரையின் முலம் அறிந்து கொள்ள முடிகிறது.

இது நல்ல முடிவு இல்லை என்று ஆட்சியாளர்கள் உணர வேண்டும். இலங்கை அரசை போர் குற்றவாளி கூண்டில் ஏற்றி விசாரிக்க வேண்டும் என்று சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

0 Responses to ஈழத்தமிழர் விடயத்தில் திமுக போலவே அதிமுக: வைகோ குற்றச்சாட்டு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com