இராணுவ அடக்குமுறையைக் கொண்ட குடும்ப ஆட்சியொன்றை நோக்கி இலங்கை படிப்படியாக நகர்ந்து கொண்டிருப்பதாக மனித உரிமை ஆர்வலர் சட்டத்தரணி நிமல்கா பொ்ணான்டோ குறிப்பிடுகின்றார்.
யுத்தத்தின் பின்னான இலங்கையில் எங்கு பார்த்தாலும் இராணுவ மயமாக்கமே தீவிரம் பெற்றுக் காணப்படுகின்றது என்றும் சட்டத்தரணியும், மனித உரிமை ஆர்வலருமான கலாநிதி நிமல்கா பொ்ணான்டோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சிவராம் நினைவுதின வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் ஊடக சுதந்திரம் என்பது தற்போது அடியோடு இல்லை. எதில் பார்த்தாலும் இராணுவத் தலையீடு தான் அதிகமாக காணப்படுகின்றது. யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் விடயத்திலும் இராணுவ நிகழ்ச்சி நிரலே மேலோங்கிக் காணப்படுகின்றது.
தற்போதைய நிலையில் தோல்வியுற்ற ஜனநாயகக் கட்டமைப்பிலிருந்து குடும்ப ஆட்சிமுறையொன்றை நோக்கி நாடு படிப்படியாக நகர்ந்து கொண்டிருக்கின்றது. சட்டம் ஒழுங்கு என்பதெல்லாம் என்னவென்று கேட்கும் அளவுக்கு சீர்குலைந்து போயுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட சிவராம் மட்டுமல்ல, பாதிப்புகளை எதிர்கொண்ட எந்தவொரு ஊடகவியலாளர்களுக்கும் எதுவிதமான நிவாரணங்களோ சட்டரீதியான உதவிகள் மற்றும் பாதுகாப்போ வழங்கப்படவில்லை. அதன் காரணமாக இன்றைக்கும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவே செய்கின்றனர் என்றும் அவர் தனது நினைவுரையின் போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ அடக்குமுறையைக் கொண்ட குடும்ப ஆட்சியை நோக்கி நகர்கின்றது: நிமல்கா
பதிந்தவர்:
Anonymous
07 June 2011



0 Responses to இராணுவ அடக்குமுறையைக் கொண்ட குடும்ப ஆட்சியை நோக்கி நகர்கின்றது: நிமல்கா