கடந்த ஆறு தசாப்தங்களுக்கு மேலாக சிறீலங்கா பேரினவாத அரசின் அடக்குமுறைக்கு எதிராக போராடிவரும் தமிழினம் தொடர்ச்சியாக இனவழிப்புக்கு உள்ளாக்பட்டுவந்துள்ளது.இன்றும் வேறு வடிவங்களில் தமிழர்கள் இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டுவருகின்றார்கள்
இறுதியாக நடைபெற்ற முள்ளிவாய்கால் படுகொலையிலும் குழந்தைகள் குஞ்சுகள் என்று பாராமல் வகை தொகையின்றி பல்லாயிரக்கணக்கில் உலகத்தால் தடைசெய்யப்பட்ட குண்டுகளால் தமிழ்மக்கள் கொல்லப்பட்டார்கள் மக்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டு நிற்கதியாக விடப்பட்டுள்ளார்கள் பல்லாயிரக்கணக்கில் அவையங்களை இழந்து அங்கவீனமாக்கப்பட்டு நின்மதியான வாழ்வுக்காக ஏங்கித்துடிக்கின்றார்கள் தமிழ்த்தலைவர்கள் என தம்மை தாமே சொல்லிக்கொண்டு ராஜபக்சாவின் ஏவல் பேய்களாக நின்று தம் இனத்தையே வதைக்கின்றார்கள்.
இன்நிலையில் கண்ணீர் விடும் தமிழ் இனத்துக்கு கண்ணின் இமையாக நின்று எம்மினத்தை அழித்தவர்களை குற்றவாளி கூண்டில் ஏற்றி எமது மக்களின் உரிமைக்காக குரல்கொடுக்கும் 3வது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் அவர்களுக்கும், தீர்மானத்திற்கு ஆதரவாக நின்ற சட்டப் பேரவையில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் நோர்வே தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் இதயபூர்வமான நன்றிகள்.
சிங்கள பெளத்த இனவாத அரசின் தமிழின அழிப்பிலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டு, கண்ணியமிக்க, சமவுரிமையுடைய வாழ்வைப் பெறுவதற்காக கடந்த அரை நூற்றாண்டுக் காலத்திற்கும் மேலாக போராடிவரும் ஈழத் தமிழினத்தின் விடுதலை வரலாற்றில் தமிழக சட்டப் பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் ஒரு திருப்பு முனையாகும்.
இந்த தீர்மானத்தோடு தொடர்ச்சியாக எமது இனத்தின் நிரந்தர விடுதலைக்காக பாடுபட்டு உங்களின் ஆட்சிகாலத்துக்குள் தமிழினம் பூர்வீக பூமியில் சுதந்திர காற்றை சுவாசிக்கவேண்டுமென அன்போடு வேண்டிநிற்கின்றோம்.
நன்றி
நோர்வே தமிழர் ஒருங்கிணைப்பு குழு
08.06.2011
சட்டமன்ற தீர்மானத்திற்கு நோர்வே தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் இதயபூர்வமான நன்றிகள்
பதிந்தவர்:
ஈழப்பிரியா
09 June 2011



0 Responses to சட்டமன்ற தீர்மானத்திற்கு நோர்வே தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் இதயபூர்வமான நன்றிகள்