தமிழ்ப் பகுதிகளான யாழ்ப்பாணம், வன்னி மற்றும் மட்டக்களப்பிலிருந்து ஏராளமான தமிழ்ச் சிறுவர்கள் கடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் உள்ளன. இந்நிலையில் மட்டக்களப்பில் கடத்தப்பட்ட ஒரு சிறுவன் சிங்களப் பிரதேசமான தம்புல்லவில் அடிமைத் தொழிலாளியாக இருப்பது தெரியவந்துள்ளது.
11 வயதான குறித்த சிறுவனின் பெயர் அதிசயராஜா சௌந்தரராஜா ஆகும். இவன் சித்தாண்டி மகா வித்தியாலய மாணவராவான். இச்சிறுவனை துணைக்குழுவின் உறுப்பினரான ராமச்சந்திரன் மரியராஜ கடந்த மே மாதம் கடத்திச் சென்று, சிங்களக் கும்பல் ஒன்றிடம் கொடுத்துள்ளார். அவர்கள் அச்சிறுவனை தம்புல்லவில் அடிமைத் தொழிலாளியாக ஈடுபடுத்தியுள்ளனர். இக்கும்பலே புதையல் தோண்டும் சட்டவிரோதச் செயலிலும் ஈடுபட்டுவருவதாகக் கூறப்படுகிறது.
தகவல் அறிந்ததும், இச்சிறுவனை மீட்பதற்கு அவனின் தாத்தாவான வேல்முருகு சிவலிங்கம் முயற்சிகள் எடுத்தபோது, அவருக்கு துணைக்குழு அச்சுறுத்தல் விடுத்துள்ளது. இந்த அச்சுறுத்தல் குறித்தும் ஏறாவூர் போலீஸ் நிலையத்திலும், மனித உரிமைகள் ஆணையத்தின் மட்டக்களப்புப் பிராந்திய அலுவலகத்திலும் முறைப்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
அதிர்வு
கடத்தப்பட்ட தமிழ்ச் சிறுவன் சிங்களப் பகுதியில் அடிமையாகக் கண்டுபிடிப்பு!
பதிந்தவர்:
ஈழப்பிரியா
10 June 2011



0 Responses to கடத்தப்பட்ட தமிழ்ச் சிறுவன் சிங்களப் பகுதியில் அடிமையாகக் கண்டுபிடிப்பு!