Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் தாயக விடுதலைப் பயணத்தில் உருவாகியுள்ள அரசியல் இடைவெளியை நிவர்த்தி செய்யும் பொருட்டு, பிரித்தானியா வாழ் தமிழீழ செயற்பாட்டாளர்களால் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக் கருத்தரங்கு பிரித்தானியத் தலைநகர் லண்டனின் KINGSBURY பகுதியில் No: 368A Stag Lane, Kingsbury, London, NW9 9AA எனும் முகவரியில் அமைந்துள்ள RNB VENUE, மண்டபத்தில் எதிர்வரும் 05-06-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை நடைபெறவுள்ளது.

தமிழீழம் ஒன்றே தமிழர்களுக்கு முழுமையான விடுதலையை பெற்றுத்தரும் என உளமார ஏற்றுக்கொண்டவர்கள் இக்கருத்தரங்கில் பங்குபற்றலாம் என்பதை ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துக்கொண்டுள்ளனர்.

அத்தோடு 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு இக்கருத்தரங்கில் அனுமதி இல்லை என்பதையும் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்தரங்கு நடைபெறும் இடம்: "RNB VENUE"
No: 368A Stag Lane,
Kingsbury, London,
NW9 9AA

காலம்: 05-06-2011 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம்: காலை 10:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை

0 Responses to தாயகம் நோக்கிய செயற்பாட்டிற்கான சமகால கருத்தரங்கு - பிரித்தானியா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com