இலங்கையில் அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்து இன அழிப்பை நிகழ்த்தியவர் எனக் கூறப்படும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போர்க்குற்றவாளி என அறிவிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும். அத்துடன் அவரை கைதுசெய்யவும் வலியுறுத்தி தமிழகம், கோவையில் கையெழுத்து வேட்டை நடைபெற்று வருகிறது.
ஐ.நா. சபையின் அறிக்கையை மதித்து இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்.
மஹிந்த ராஜபக்ஷவைக் காப்பாற்ற இந்தியா முயற்சிக்கக் கூடாது.
ஈழத்தமிழர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெரு மன்றத்தின் கோவை மாவட்டக்குழு சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் கிளைகள் மூலமாக பொதுமக்களிடம் கையொப்பம் பெறப்பட்டு அதை மாநிலக்குழு மூலம் ஐ.நா.சபைக்கு அனுப்பி வைப்போம் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் கண்ணன் தெரிவித்தார்.



0 Responses to போர்க்குற்றவாளியை கைது செய்யக் கோரி தமிழகத்தில் கையெழுத்து வேட்டை