Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை அரசியலைப் பொறுத்தவரை தமிழர்கள் நிர்க்கதி நிலையை எதிர்கொண்டுள்ளதாக முன்னாள் புலனாய்வுத்துறை முக்கியஸ்தர் கேணல் ஹரிஹரன் கட்டுரையொன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அமைதிப்படையின் முன்னாள் புலனாய்வு முக்கியஸ்தரான கேணல் ஹரிஹரன் தெற்காசிய ஆய்வுக்குழுவின் இணையத்தளத்துக்கு எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரையிலேயே மேற்கண்ட கருத்தைத் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் பின் இலங்கை மூன்று விடயங்களைத் தாமதப்படுத்தும் போக்கைக் கொண்டுள்ளது. அல்லது அவற்றுக்குத் தீர்வைக் காண்பதில் நாட்டம் இல்லாததைப் போன்று நடந்து கொள்கின்றது.

போர்க்குற்றங்களில் தொடர்புடையவர்களுக்கு தண்டனைகள் வழங்குதல், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகள், தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வை வழங்கல் என்பனவே அந்த மூன்று விடயங்களுமாகும்.

அதன் காரணமாக இலங்கையின் நன்மதிப்பு குறைந்து கொண்டு செல்கின்றது. வெளிநாடுகளில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் சட்டப்பேரவைத் தீர்மானங்கள் என்பன அதன் பிரதிபலன்களாகும்.

அத்துடன் இந்திய மத்திய அரசாங்கமும் இலங்கையுடனான உறவில் முன்புபோல நெகிழ்ச்சித்தன்மையுடன் நடந்து கொள்ளத் தயாராக இல்லை என்பதை அண்மைய கண்டனங்களும், இலங்கைக்கு விஜயம் செய்திருந்த தூதுக்குழுவின் இறுக்கமான போக்கும் புலப்படுத்துகின்றது.

அதன் காரணமாக போர்க்குற்றங்களில் தொடர்புடையவர்களுக்குத் தண்டனை வழங்குவதில் தான் தீவிரமாக இருப்பதாக செயற்பாடுகள் மூலம் வெளிப்படுத்துவதே இலங்கைக்கு இன்றுள்ள ஒரே வழியாகும். இல்லாதபோது எதிர்வரும் செப்டம்பரில் நடைபெறும் ஐ.நா.மனித உரிமை அமர்வில் இலங்கையானது கடும் எதிர்ப்புகளையும் பாதகங்களையும் எதிர்கொள்ள நேரிடலாம் என்றும் அவர் தனது கட்டுரையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to தமிழர்கள் நிர்க்கதி நிலையை எதிர்கொண்டுள்ளனர்: கேணல் ஹரிஹரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com