Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் மக்களுக்கு எதிராக சிறீலங்கா படையினர் மேற்கொண்ட படுகொலைகள் தொடர்பாக சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பிய செய்தி ஆவணம் தன்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாகவும், அங்கு இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் தேவை எனவும் பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் அலிஸ்ரர் பேட் இன்று (15.06.2011) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

நேற்று இரவு ஒளிபரப்பாகிய காணொளிச் செய்தி ஆய்வு மிகவும் வருத்தமான காட்சிகளை கொண்டதாக அமைந்துள்ளது. கண்கள் கட்டப்பட்ட நிலையில் தமிழ் கைதிகளை சிறீலங்கா படையினர் சுட்டுப் படுகொலை செய்யும் காட்சிகள் மனதை வேதைனைப்படுத்தியது என அமைச்சர் பேட் தெரிவித்துள்ளார்.

இந்த மனித உரிமை மீறல்கள் குறித்து சிறீலங்கா அரசு விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும். அவ்வாறு மேற்கொள்ளாதுவிட்டால், சிறீலங்கா மீது அனைத்துலக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

2009 ஆம் ஆண்டு போர் நிறைவடைந்த நாள் முதல், அங்கு இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என நாம் கோரிக்கை விடுத்து வருகின்றோம். சிறீலங்கா அரசிடம் இருந்து ஆக்கபூர்மான நடவடிக்கைகளை நாம் எதிர்பார்க்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேசயம், புதிய காணொளி ஆதாரங்களில மேலும் மூன்று தமிழர்களை சிறீலங்கா இராணுவம் கண்கள் கட்டப்பட்ட நிலையில் சுட்டு படுகொலை செய்வது வெளியிடப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் பெண்.

சிறீலங்கா அரசின் சிங்கள இராணுவ அதிகாரியின் தெளிவான கட்டளையின் அடிப்படையில் மிகவும் திட்டமிட்ட முறையில் இந்த படுகொலைகளை சிங்கள சிப்பாய்கள் மேற்கொள்வது பெரும் அதிர்ச்சி அலைகளை தோற்றுவித்துள்ளது.

சிறீலங்கா இராணுவத்தினரின் இந்த படுகொலை காணொளிகள் உண்மையானவை என ஐ.நாவின் நீதிக்குப்புறம்பான படுகொலைகள் தொடர்பான ஐ.நா அதிகாரி கிறிஸ்தோப் ஹெயின்ஸ் தெரிவித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

1 Response to ''இலங்கையின் படுகொலைக் களம்'' என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது: பிரித்தானியா வெளிவிவகார அமைச்சர்

  1. santa Says:
  2. its too late gentleman

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com