ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் இராஜதந்திர மற்றும் தனிப்பட்ட நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய நாடுகள் நிபுணர்குழு அறிக்கை தொடர்பாக இலங்கைக்கு ஆதரவான உறுதியான நிலைப்பாட்டை இந்தியா எடுப்பதற்கு தடையாக உள்ள தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள் என்ற இலக்கை அரசாங்கம் அடைந்து கொள்ள முயற்சிக்கின்றது.
மகிந்தவின் சிரேஷ்ட ஆலோசகராக அண்மையில் நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் மிலிந்த மொறகொட உத்தியோகபூர்வமற்ற முறையில் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு முதல்வருக்கு நெருக்கமான வேறொரு மாநிலத்தின் முன்னாள் முதலமைசச்சர் ஒருவர் மூலமாகவே ஜெயலலிதாவை மிலிந்த மொறகொட சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்திய அரசியலில் ஜெயலலிதா முக்கியமான ஒருவராக மாறுவார் என்று சிறிலங்கா கருதுவதாலேயே அவருடன் நெருக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக அரசாங்கத்துக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.
ஜெயலலிதாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் முயற்சியில் அரசாங்கம்
பதிந்தவர்:
Anonymous
05 June 2011



0 Responses to ஜெயலலிதாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் முயற்சியில் அரசாங்கம்