Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறிலங்கா இனவாத படைகளினால் 3 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படும் ஒளிப்பதிவை TamilVoice.dk இணையத்தளம் தனது தொடர்பாளருடாக பெற்று டென்மார்க் தமிழர் பேரவையின் மானிடவிவகாரகுழுவினூடாக Channel 4 தொலைக்காட்சியிடம் கையளிந்திருந்தது. Channel 4 தொலைக்காட்சி (14.06.2011) அன்று ஒளிபரப்பிய ஆவணப்படத்தில் இந்த படுகொலை காட்சியும் இடம் பெற்றிருந்தது.

டென்மார்க் தொலைக்காட்சி படுகொலை ஒளிப்பதிவை TamilVoice.dk இணையத்தளத்திடம் இருந்து அதிகாரபூர்வமாக பெற்று ஒளிபரப்பியிருந்தது.

சிறிலங்கா அரசின் தமிழ்மக்கள் மீதான இனப்படுகொலையை விசாரனை செய்ய கோரி டெனமார்க் தமிழர் பேரவையின் மனுவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் கடந்த மாதம் 23ம் நாள் பதிவு செய்துள்ளது..

தமிழ்மக்கள் மீதான இனப்படுகொலையின் ஆதாரங்களை டென்மார்க் தமிழர் பேரவையின் மானிடவிவகாரகுழுவினர் சேகரித்துவருகின்றனர். இப்பொழுது இவர்களிடம் இருக்கும் இந்த படுகொலை காட்சியும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற முதன்மை வழக்கறிஞருக்கு டெனமார்க் தமிழர் பேரவையின் வழக்கறிஞருடாக அனுப்பி வைக்கப்படும் என தெரியவந்துள்ளது.

0 Responses to புதிய படுகொலைக்காட்சியை டென்மார்க் தொலைக்காட்சியும் ஒளிபரப்பியது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com