Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாம் தமிழர் கட்சி தலைவர் இயக்குனர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் தெரிவித்துள்ளார்.

காதலித்து விட்டு திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சீமான் மீது கற்பழிப்பு உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வளசரவாக்கம் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் விசாரணை நடத்தி வருகிறார்.

விஜயலட்சுமி தான் கொடுத்த புகார் தொடர்பாக சில ஆதாரங்களை பொலிசிடம் கொடுத்துள்ளார். இதற்கு விளக்கம் கேட்டு சீமானுக்கு சம்மன் அனுப்ப பொலிசார் முடிவு செய்துள்ளனர். விஜயலட்சுமி கொடுத்துள்ள புகாரை சட்ட ரீதியாக சந்திப்பேன் என்று கூறியிருந்த இயக்குனர் சீமான் மீண்டும் அவர் மீது பரபரப்பான குற்றச்சாட்டுக்களை கூறி உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, விஜயலட்சுமியை நான் நேரில் பார்த்து பேசியே 1 1/2 ஆண்டுகள் ஆகிறது. "வாழ்த்துக்கள்" படத்தில் நடித்தபோது கூட நான் அவருடன் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. பணம் கேட்டு மிரட்டி நான் பணியாததால் என் மீது புகார் கொடுத்துள்ளார். அவரை யாரோ பின்னணியில் இருந்து இயக்குகிறார்கள்.

மிரட்டி பணம் பறிப்பது விஜயலட்சுமிக்கு வாடிக்கையான ஒன்றாகி விட்டது. தயாரிப்பு நிர்வாகி ஒருவர் கூட சமீபத்தில் ரூ.5 லட்சத்தை இழந்துள்ளார். அவரை மிரட்டி பணம் வாங்கியுள்ளார். விஜயலட்சுமி யார், யாருடன் பழகி உள்ளார் என்பது ஊரறிந்த விடயம். அரசியலில் எனக்கு இருக்கும் புகழை கெடுக்க திட்டமிட்டு நடத்தப்படும் இந்த சதித்திட்டத்தால் என்னை வீழ்த்தி விட முடியாது என்று சீமான் தெரிவித்தார்.

நடிகை விஜயலட்சுமி இதற்கு முன்பு ஏற்கனவே 3 பேர் மீது புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர். சினிமா இயக்குனர் ஒருவர் தன்னை காதலித்து ஏமாற்றியதாக புகார் கொடுத்த விஜயலட்சுமி, தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கும் முயன்றுள்ளார். கடந்த 2006 ம் ஆண்டு கன்னட நடிகர் ஒருவருடன் 3 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வருவதாகவும் விஜயலட்சுமி கூறி உள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி இயக்குனர் ஒருவர் மீதும், விஜயலட்சுமி புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பான ஆதாரங்கள் அனைத்தையும் சீமானின் வக்கீல்கள் திரட்டி வைத்துள்ளனர். வழக்கு விசாரணையின் போது இதனை தாக்கல் செய்யவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

0 Responses to விஜயலட்சுமி விவகாரம் - என்னை வீழ்த்தி விட முடியாது: சீமான்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com