Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ம.தி.மு.க.வின் 18வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் பேசிய வைகோ,

தமிழக சட்டசபை தேர்தலின் போது ஜெயலலிதா அளித்த வாக்குறுதிப்படி போர்க்குற்றம் புரிந்த இலங்கை அதிபர் ராஜபக் சேவை குற்றவாளி கூண்டில் நிறுத்த தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். அதற்கான தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்ற வேண்டும்.

ம.தி.மு.க.வை விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்களாக கூறுகின்றனர். ஆனால் விடுதலைப்புலிகளை ஆதரிக்க மாட்டோம் என்று எந்தக்கட்சியும் கூற முடியாத நிலை வந்திருப்பதை மக்கள் உணர வேண்டும்.

லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த கொடுமை உலகில் வேறு எங்கும் நடக்க வில்லை. அத்தகைய குற்றம் புரிந்த ராஜக்சேவை குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும் என்றார்.

0 Responses to ராஜபக்சேவை குற்றவாளி கூண்டில் நிறுத்த தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்: வைகோ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com