Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் செய்தாக 2004 முதல் 2007ஆம் ஆண்டுவரை தொலைத் தொடர்பு அமைச்சராகவும் தற்போது மத்திய ஜவுளித்துறை அமைச்சராக உள்ள தயாநிதி மாறனுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா கோட்டையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம், மத்திய மந்திரி தயாநிதி மாறன் மீது புகார் எழுந்துள்ளதே? என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர், ‘’பிரதமர் இதில் தேவையான நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்.

மந்திரி பதவியில் இருந்து தயாநிதிமாறனை நீக்க வேண்டும். தயாநிதி மாறனும் பதவி விலகி சட்டத்தை எதிர் கொள்ள வேண்டும்’’ என்று பதிலளித்தார்.

0 Responses to தயாநிதிமாறன் பதவி விலக வேண்டும்: முதல்வர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com