Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை மீது மத்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார் முதல்வர் ஜெயலலிதா.

இதனால் பழ. நெடுமாறன் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’ராஜபக்சே போர்க் குற்றவாளி என ஐ.நா. விசாரணைக் குழு அளித்தப் பரிந்துரையை ஏற்று சர்வதேச நீதிமன்றம் அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும், இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை நடவடிக்கைகளை எடுக்கவும் இந்திய அரசு முன் வரவேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்து நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை வரவேற்பதோடு அவரை மனப்பூர்வமாகப் பாராட்டுகிறேன்.

ஆறரைக் கோடி தமிழ் மக்களின் பிரதிநிதித்துவ அமைப்பான தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இத்தீர்மானம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாகும்.

ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலு சேர்க்கும் தீர்மானம் ஆகும்.

இந்தியா முழுவதும் உள்ள அகில இந்தியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் ஆகியவற்றின் தலைவர்களை அழைத்து டெல்லியில் கூட்டம் ஒன்று நடத்தி இத்தீர்மானத்திற்கு அவர்களின் ஆதரவையும் பெறுவதின் மூலம் மத்திய அரசுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கவும், இந்தியா முழுவதும் இந்தப் பிரச்சினைக்கு ஆதரவு திரட்டவும் வழிவகுக்கும்.

எனவே இந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளுமாறு முதல்வர் ஜெயலலிதாவை வேண்டிக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

1 Response to ராஜபக்சே போர்க்குற்றவாளி என்பதற்கு வலு சேர்க்க இந்தியத்தலைவர்களின் ஆதரவை திரட்ட வேண்டும்: ஜெ.வுக்கு நெடுமாறன் வேண்டுகோள்

  1. இளமாறன்

    ஜெயலலிதா அவர்களுக்கு‍ தமிழர்கள் சார்பில் எனது‍ மனமார்ந்த வாழ்த்துக்கள். கருணாநிதி செய்ய யோசித்த கொண்டிருந்ததை (காங்கிரேஸ்க்கு‍ பயந்து)ஜெயா அவர்கள் சாதாரணமாக செய்து‍ விட்டத்தை மனதார பாராட்டியே ஆக வேண்டும். நெடுமாறன் கூறியது‍ போல , ஜெயா அவர்களின் நண்பர் குஜராத் முதலமைச்சர் மோடி‍ அவர்களையும் வலியுறுத்தி இது‍ போன்றதொரு‍ தீர்மானத்தை பிஜேபி ஆளும் மாநிலங்களும் கொண்டு‍ வந்தால், மத்திய அரசுக்கு‍ அச்சம் இருக்கும். மேலும் விடுதலை புலிகளின் மேல் தடை வர காரணமான ஜெயா அவர்கள் அதை நீக்க ஆதரவு தந்தால், தமிழினம் அவரை என்றும் மறக்காது‍ , அப்படி‍ செய்தால் , அவரே உலக தமிழின தலைவியாக போற்றப் படுவார்.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com