Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நேற்று (14.06.2011) சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான போர்க்குற்ற காட்சி மன்னிக்க முடியாத போர்க் குற்றமே என்பதை தெளிவாக வெளிக்காட்டுகிறது.

மட்டக்களப்பு தளபதி ரமேஸ் போரில் மடிந்ததாக சிறீலங்கா இராணுவத்தின் இணையத்தளம் தெரிவிக்கிறது. ஆனால் அவர் சரணடைந்த பின்னர் சிங்கள இராணுவத்தால் விசாரிக்கப்படும் காணொளி வருகிறது. அதற்குப் பின்னர் அவருடைய முகம் அடித்து சிதைக்கப்பட்டு, கொன்று வீசப்பட்ட புகைப்படம் வெளியாகிறது – மாபெரும் போர்க் குற்றம்.

புலித்தேவன், பா. நடேசன் இருவரும் சரணடைய விரும்பியதை சிறீலங்கா அதிபரே ஏற்றுக் கொண்டுள்ளார். வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த அவர்களை இராணுவம் சுட்டுக் கொன்று எரித்த புகைப்படம் பின்னர் வெளியாகிறது. ஆக சரணடைந்த போர்க் கைதிகளை கொன்று வீசும்படி சிங்கள இனவாத அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதற்குக் காரணமான கோத்தபாயவையும், மகிந்த ராஜபக்ஷவையும் ஒளிநாடா காண்பிக்கிறது – மன்னிக்க முடியாத போர்க்குற்றம்.

போரில் ஈடுபடாத கலைஞரான இசைப்பிரியா பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டு கொன்று வீசப்பட்டிருக்கிறார். சரணடைந்த பெண் புலி உறுப்பினர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்டு லாரிகளில் இழுத்து மிருகங்கள் போல எறியப்படும் காட்சிகள் வருகின்றன. மூன்று பெண்களை கைகளைக் கட்டிவிட்டு சுட்டுத்தள்ளுகிறார்கள். கைகளைக் கட்டி ஒருவரை சுடுவது போர்க்குற்றமாகும். காரணம் சரணடைந்துவிட்டார் என்பது கைகளை கட்டுவதன் அடையாளமாகும். அதன் பின்னர் நீதிமன்றம் கொண்டு செல்லப்பட வேண்டுமே அல்லாது சுடுவதற்கு ஒரு படையினனுக்கு யாதொரு உரிமையும் கிடையாது.

மேலும் சரணடைந்த ஆண்களை தென்னையுடன் கட்டி வைத்து ஓர் இராணுவம் தலையைப் பிடிக்க இன்னொருவன் கத்தியால் கழுத்தறுத்து கொன்றுள்ளான். இது சர்வதேச போர்க் குற்றம்.

சிறீலங்கா போர்க்குற்ற விசாரணை நீதிமன்றில் தன்னை பதியாவில்லை என்று கூறுவது தப்பு. இப்படியான ஒரு நாடு எப்படி தன்னை நீதியின் முன் பதிவு செய்யும்..? எந்தவொரு நியாயம் கூறலுக்கும் அப்பாற்பட்டு சிறீலங்கா போர்க் குற்றவாளியே என்பதற்கு போதிய ஆதாரங்களை இக்காணொளி தருகிறது.

இந்த இலட்சணத்தில் போர் வெற்றி கொண்டாடுகிறார் மகிந்த ராஜபக்ஷ என்பதையும் அது சுட்டிக்காட்ட தவறவில்லை. மேலும் மக்களை போகவிடாமல் புலிகள் தடுத்தனர் என்ற குற்றச்சாட்டையும் அது பக்கச் சார்பின்றி வைத்துள்ளது மனங்கொள்ளத்தக்கது. மேலும் இந்த விவகாரம் சிங்கள இராணுவம் – புலிகள் என்பதல்ல பொது மக்கள் நரபலி எடுக்கப்பட்டார்கள் என்ற மானிட கொலை குற்றத்திற்குள் வருகிறது.

0 Responses to விடுதலைப் புலிகளின் தளபதி ரமேஸ், மற்றும் நடேசன், புலித்தேவன் இவர்களின் மரணங்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com