Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சீனாவின் விமானம், இஸ்ரேலின் விமானங்கள் பறப்பதை அது காட்டுகிறது. இப்படியொரு சின்னஞ்சிறிய நிலப்பரப்பில் உள்ள மக்களை கொன்றொழிக்க வேண்டிய தேவை சீனர்களுக்கு ஏன் வந்தது என்ற கேள்வியை ஒளிநாடா எழுப்புகிறது.

இஸ்ரேலிய கொலைஞர்களுக்கு இங்குவர என்ன முகாந்திரம் இருக்கிறது என்ற கேள்வியையும் அது ஏற்படுத்துகிறது. மேலும் இந்தியா என்ற வார்த்தையை அவர்கள் உச்சரிக்காமலே சீனாவை உச்சரிக்கிறார்கள். இது மிகவும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

சர்வதேச சமுதாயம் பக்கச் சார்பாக நடந்து சமநிலையற்ற ஒரு போரை உருவாக்கியிருக்கிறது என்றும் அது கூறுகிறது. இது போரல்ல சர்வதேச போர்க்குற்றம். இதற்கு துணை போன அத்தனைபேரும் குற்றவாளிகளே என்பதை அப்பட்டமாக சந்தேகத்திற்கு இடமின்றி அது எடுத்துரைக்கிறது.

மேலும் கூறுகையில் ஐ.நா செயலருக்கு இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை என்ற கருத்தில் உண்மை இருந்தாலும் கூட, பாதுகாப்பு சபையில் இதை எதிர்க்க எவனும் முன்வரக் கூடாது என்று தெட்டத்தெளிவாக எடுத்துரைக்கிறது. இந்திய மேனனும் நிருபாமாவும் கூறுவது போல தீர்வை வழங்குவதால் மட்டும் சிறீலங்காவை மீட்க முடியாது என்பதை காணொளி மௌனமாக உணர்த்துகிறது.

இது போர்க்குற்றம், இத்தகைய குற்றங்களுக்கு மன்னிப்பு வழங்கினால் உலகமே குற்றவாளியாக நிற்க நேரிடும். ஆகவே இதற்கு உரிய நடவடிக்கை வேண்டும் என்கிறது காணொளி.

மேலும் இது குறித்து சிறீலங்காவிற்கு உணர்த்தப்பட்டாலும் அவர்கள் இதை பெரிதுபடுத்தவில்லை என்கிறது. இதுவரை அவர்கள் செய்த எந்தக் கொலைக்கும் தண்டனை பெறாமல் சர்வதேச லைசென்சை பெற்றிருக்கும்போது இப்போது மட்டும் எப்படி குற்றமென உணர முடியும் என்ற எண்ணத்தையும் காணொளி ஏற்படுத்துகிறது.

ஆனால் அனைத்து குற்றவாளிகளிலும் சர்வதேச நீதிமன்றுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதில் யாதொரு பின்வாங்கலையும் அது ஏற்படுத்தவில்லை.

0 Responses to நடைபெற்ற போர் வெறும் அப்பட்டமான பக்கச் சார்பான போராகும் என்று சனல் 4 தெரிவிக்கிறது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com