வன்னி விடுவிக்கப்பட்ட பின்பும் படைத்தரப்பைச் சேராதோர் சிலரும் இன்னும் துப்பாக்கிகளை வைத்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் நடைபெற்ற அவசர காலச்சட்ட நீடிப்பு மீதான பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பில் அண்மைக்காலத்தில் நான்கு துப்பாக்கிப் பிரயோக சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. படைத்தரப்பினரிடம் மட்டுமல்லாது இன்னும் சில தரப்பினரிடமும் துப்பாக்கிகள் இருப்பதையே அச்சம்பவங்கள் உணர்த்துகின்றன.
வன்னி விடுவிக்கப்பட்ட பின் படைத்தரப்பைச் சேராதோர் துப்பாக்கிகளை வைத்திருப்பதற்கான அவசியம் என்ன? அதிலும் குறிப்பாக அவசரகாலச் சட்டம் அமுலில் இருக்கும் போதே இச்சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அவ்வாறாயின் அவசர காலச்சட்டத்தினால் என்ன பயன்?
கிழக்கு விடுவிக்கப்பட்ட பின்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் இதுவரை சுமார் 300 இளைஞர்கள், யுவதிகள் கடத்தப்பட்டுக் காணாமற் போகச் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்பான விபரங்களை நாங்கள் பெரும் சிரமத்துடன் சேகரித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளோம். ஆயினும் இதுவரை அதில் ஒருவர் கூடக் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தனது உரையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வன்னியில் படைத்தரப்பைச் சேராதோர் துப்பாக்கிகளை வைத்துள்ளனர்: பொன் செல்வராசா
பதிந்தவர்:
ஈழப்பிரியா
09 June 2011



0 Responses to வன்னியில் படைத்தரப்பைச் சேராதோர் துப்பாக்கிகளை வைத்துள்ளனர்: பொன் செல்வராசா