Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வது குறித்து இந்திய தலைவர்களுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தை நடத்தியதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கு தேவையான சகல முயற்சிகளையும் ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நிபுணர் குழு அறிக்கையை அரசாங்கம் நிராகரித்த போதிலும் அதில் குறிப்பிட்ட விடயங்களை உறுதிப்படுத்தும் வகையில் அரசாங்கம் நாள்தோறும் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

நிபுணர் குழு அறிக்கையில் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அதனை நிரூபிக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு ஐந்து மாதங்கள் கடந்துள்ள போதிலும், அதனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரையில் கைது செய்யப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் அரசியல் அமைப்பை மீறும் வகையில் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக நீடித்து வரும் அவசரகாலச்சட்டத்தை நீக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தி வந்த போதிலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to பொன்சேகாவின் விடுதலை - இந்திய தலைவர்களுடன் ரணில் பேச்சு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com