Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைத் தமிழர்கள் அவர்கள் சொந்தப் இடங்களிலேயே மறுவாழ்வு பெறுவதற்கான உடனடி நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ள வலியுறுத்துமாறு மத்திய அரசை தமிழ்நாடு மாநில அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழ்நாட்டின் 14வது சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய போதே தமிழ்நாடு மாநில அரசாங்கம் மேற்கண்டவாறு அறிவித்துள்ளது.

இலங்கைத் தமிழர்கள் முகாம்கள் சீரமைக்கப்பட்டு, அவர்கள் கெளரவமாக வாழத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் ஆளுநர் உரையில் தமிழக அரசு மேலும் உறுதியளித்துள்ளது.

இன்றைய சட்டமன்றத்தொடரின் அங்குரார்ப்பண நிகழ்வின் போது இலங்கைத் தமிழர்கள் குறித்து தமிழ்நாடு அரசு அளித்துள்ள உறுதிமொழி வருமாறு:

“இலங்கைத் தமிழர்கள் தங்கியுள்ள முகாம்கள் சீரமைக்கப்பட்டு அவர்கள் தமிழ்நாட்டிலேயே கௌரவமாக வாழத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இந்த முகாம்களில் தரமான இருப்பிடம், குடிநீர், சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள் போன்றவை செய்துத் தரப்படும்.

இலங்கை தமிழ் அகதிகளின் குழந்தைகள் கல்வி பயிலத் தேவையான உதவிகளை வழங்குவதுடன் அவர்கள் வேலை வாய்ப்பைப் பெறுவதற்கான சிறப்பு வேலை வாய்ப்புப் பயிற்சிகள் அளிக்கப்படும்.

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அனைத்து நலத் திட்டங்களும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் நீட்டிக்கப்படும். இலங்கைப் போரினால் இலட்சக் கணக்கான தமிழ் மக்கள் மாண்டு போன நிலையில் மீதமுள்ள இலங்கைத் தமிழர்களும் தங்கள் சொந்த நாட்டிலேயே அடிமைகள் போல் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர்கள் அவர்கள் சொந்தப் பகுதிகளிலேயே மறுவாழ்வு பெறுவதற்கான உடனடி நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ள வலியுறுத்துமாறு மத்திய அரசை இந்த அரசு கேட்டுக்கொள்கிறது” என்றும் தமிழக அரசின் ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளையில், கிழக்கு மாகாணத்தில் விடுதலைப்புலிகளுடனான சண்டையின்போது கணவனை இழந்த பெண்களுக்கு இந்தியா சார்பில் ரூ. 20. 3 கோடி மதிப்பிலான உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.

0 Responses to இலங்கைத் தமிழருக்கு ஜெயலலிதா அரசு ஆதரவு: ஆளுநர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com