விடுதலைப் புலிகளுக்கெதிரான தடையை நீக்கக் கோரி ஐரோப்பிய நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகள் விடுதலைப்புலிகள் இயக்கம் மீது விதித்துள்ள தடையை நீக்கவேண்டும் என்று கோரி பிரஸ்தாப வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அம்ஸ்டர்டாமில் இயங்கும் பொஹ்லர் குரூப்பின் சட்டத்தரணி விக்டர் கொப்பே விடுதலைப்புலிகளின் ஐரோப்பிய பிரிவின் சார்பாக கடந்த வியாழக்கிழமை ஐரோப்பிய நீதிமன்றில் குறித்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
விடுதலைப் புலிகள் தமது இலக்குகளை அடைவதற்கு இப்போது இராணுவ வழிமுறைகள் எதையும் பயன்படுத்துவதில்லை. முள்ளிவாய்க்கால் சம்பவத்துக்குப் பின்னர் அவர்கள் அரசியல் மற்றும் வன்முறையற்ற முறைகளைப் பயன்படுத்தியே தமிழர்களுக்கான அதிகாரப்பரவலாக்கலை அடைய முயற்சிக்கின்றார்கள்.
இலங்கை அரசாங்கத்துடன் 1987 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டுவரை விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் சுய தீர்மானத்துக்கான உரிமையை நடைமுறைப்படுத்தவே ஆயுதம் ஏந்திப் போராடினார்கள். தற்போது ஆயுதப் போராட்டம் தோல்வியடைந்துள்ள நிலையில் சாத்வீகப் போராட்டங்களின் ஊடாக அதனை அடைந்து கொள்ள விழைகின்றார்கள் என்று சட்டத்தரணி விக்டர் கொப்பே தனது வாதத்தை முன்வைத்துள்ளார்.
இந்த வழக்கு சாதகமான முடிவைத் தரும்பட்சத்தில் தமிழ் புலம்பெயர்வாளர்கள் சுதந்திரமான சமாதானமான ஜனநாயகச் செயற்பாடுகளைத் தாம் வாழும் நாடுகளில் சுதந்திரமாக முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
விடுதலைப் புலிகளுக்கெதிரான தடையை நீக்கக் கோரி ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்கு
பதிந்தவர்:
Anonymous
07 June 2011



0 Responses to விடுதலைப் புலிகளுக்கெதிரான தடையை நீக்கக் கோரி ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்கு