போருக்கு முன்னிருந்த இடங்களில் தமிழ்மக்கள் குடியமர்த்தப்பட வேண்டும் : ஜெயலலிதா, மேனனிடம் வலியுறுத்தல்.
போருக்கு முன்னர் இலங்கை தமிழ்மக்கள், அவர்கள் வாழ்ந்த சொந்த இடங்களிலேயே குடியமர்த்தப்படவேண்டும் என்று தமிழக முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் உள்ள தமது வீட்டில் நேற்று தம்மை சந்தித்த இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனனிடம் இந்த வலியுறுத்தலை அவர் விடுத்தார்.
இந்த சந்திப்பின் போது இலங்கையின் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதல்கள போன்ற விடயங்கள் பேசப்பட்டன.
இதனை தவிர கச்சத்தீவை மீண்டும் இந்தியா பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பில் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
போருக்கு பின்னர் கடந்த இரண்டாண்டுகளில் இடம்பெற்ற நடவடிக்கைகள் குறித்து சரியான செய்திகள் முறையில் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று ஜெயலலிதா கோரினார்.
தமிழக சட்டப்பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீhமானங்கள், குறித்து கருத்துரைத்த. ஜெயலலிதா, இலங்கையில் தமிழ் மக்கள் சிங்கள மக்களுக்கு சமமாக வாழ வழி செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்தார்
இந்தநிலையில் ஜெயலலிதாவின் கருத்துக்களையும் கோரிக்கைகளையும் கேட்டுக் கொண்ட சிவ் சங்கர் மேனன் தாம் இந்த விடயங்களை இலங்கை அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார்.
அத்துடன் இலங்கை சென்று திரும்பியதும் ஜெயலலிதாவை சந்திப்பதாகவும் சிவ் சங்கர் மேனன தெரிவித்தார்.
போருக்கு முன்னிருந்த இடங்களில் தமிழ்மக்கள் குடியமர்த்தப்பட வேண்டும்: ஜெயலலிதா
பதிந்தவர்:
தம்பியன்
10 June 2011



0 Responses to போருக்கு முன்னிருந்த இடங்களில் தமிழ்மக்கள் குடியமர்த்தப்பட வேண்டும்: ஜெயலலிதா