Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதி யுத்தத்தின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழிப்பதற்கு விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) குழுவினர் மறைமுகமாக பயன்படுத்தப்பட்டதாக இலங்கை இராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது.

அரசாங்கத்தின் யுத்த வெற்றியின் அனுபவ பகிர்வின் மாநாடு தற்போது இடம்பெற்று வருகிறது. இந்த மாநாட்டில் உரையாற்றிய இராணுவத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் சாகி கலகே இதனை தெரிவித்துள்ளார்.

GTV News

யுத்தத்தின் போது கருணா தரப்பினரை இராணுவம் நேரடியாக பயன்படுத்தவில்லை எனினும் அந்த குழு மறைமுகமான முறையில் பயன்படுத்தப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த தந்திரத்தில் இதுவும் ஒரு முக்கிய இராணுவ தந்திரமாக பயன்படுத்தப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Responses to ஒட்டுக்குழுவான கருணா குழுவும் இறுதிப் போரில்! - ஒத்துக்கொள்ளும் இராணுவம் - GTV செய்திகள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com