Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கு விவகாரம் தொடர்பாக ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில், ‘’கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் 3 குற்றவாளிகளையும் தூக்கிலிடுவதை இப்போது தடுத்து நிறுத்துவதற்கு அரசியலமைப்பு சட்டப்படி அதிகாரம் இல்லை. எனவே நான் குறுக்கிட முடியாது என்று முதல்வர் ஜெயலலிதா சரியாகத்தான் கூறியுள்ளார்.

எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால் ஆகஸ்ட் 15-க்குப் பிறகு உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனுத் தாக்கல் செய்வேன் என்ற எனது அச்சுறுத்தலின் காரணமாக 12 ஆண்டுகளாக செயலற்று இருந்த மத்திய அரசு இறுதியாக ஒரு முடிவெடுத்துள்ளது.

செப்டம்பர் 9-ம் தேதி இவர்கள் மூவரையும் தூக்கிலிடும் முடிவில் இதற்குமேலும் குறுக்கீடு இருக்கக்கூடாது.

மேலும் மற்றொரு குற்றவாளியான நளினிக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதை நீதிமன்றம் ரத்து செய்ய முடியும்’’ என்று தெரிவித்துள்ளார்.

1 Response to மூவரையும் தூக்கிலிடுவதை தடுத்து நிறுத்துவதற்கு சட்டப்படி அதிகாரம் இல்லை: சாமி

  1. சட்டம் சாட்சிகளும் அதிகாரங்களும் சார்ந்தது
    ஆணால்.. கருணை..?

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com