Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

லிபியாவின் இன்னும் 10 நாட்களுக்குள் புதிய அரசு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இடைக்‌கால அரசின் பிரதமர் கூறினார். லிபியாவின் அதிபர் கடாபிக்கு எதிராக கடந்த 6 மாதங்களாக கிளர்ச்சி நடந்துவருகிறது. கடாபியின் ஆதிக்கத்திலிருந்த பெரும்பாலான நகரங்கள் கிளர்ச்சியாளர்களின் வசம் வீழ்ந்தன.

கடாபியும் தற்போது ஆட்சியைவிட்டு நைஜர் நாட்டில் தஞ்சமடைந்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன. இந்நிலையில் நேற்று டிரிபோலி வந்த இடைக்கால அரசின் தலைவருக்கு கிளர்ச்சியாளர்கள் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர். இது குறித்து லிபியா இடைக்கால அரசின் தேசிய கவுன்சில் பிரதமர் முகமது ஜப்ரில் கூறுகையில், தற்போது அதிபர் கடாபியின் ஆட்சி முற்றிலுமாக அகற்றப்பட்டுவிட்டது. இன்னும் 10 நாட்களில் லிபியாவில் புதிய அரசு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதைத்‌தொடர்ந்து லிபியாவின் பல்வேறு மண்டலங்களுக்கும் பிரதிநிதிகள் நியமிக்கப்படுவர் என்றார்.

0 Responses to இன்னும் 10 நாட்களில் லிபியாவில் புதிய அரசு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com