Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”
Showing posts with label World News. Show all posts
Showing posts with label World News. Show all posts


நோர்வேயின் தெற்குப் பகுதியில் மரப்பாலம் இடிந்து விழுந்தததில் அப்பாலத்தில் பயணித்த இருவர் ஆற்றில் விழுந்த நிலையில் இருவரும் உயிருடன் மீட்கப்பட்பட்டனர்.

ஓயர் (Øyer) நகரத்தில் இந்த விபத்து இன்று திங்கட்கிழமை காலை 7.30 மணியவில் நடந்தது.

மரப்பாலத்தின் ஊடாகப் பயணித்த மழுந்து ஒன்றும் பாரவூர்த்தியும் ஆற்றில் விழுந்தன. மகிழுந்து ஆற்றில் மூழ்கியது. பாரவூர்தி செங்குத்தாக விழுந்து கிடந்தது.

இரு வாகனங்களிலிருந்தும் ஓட்டுநர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர் என காவல்துறையினர் அறிக்கையில் தெரிவித்தனர்.

ஏறக்குறைய 150 மீட்டர் நீளமுள்ள பாலம் குட்பிரண்ட்ஸ்டல்ஸ்லாகன் ஆற்றின் மேற்குக் கரையையும் ட்ரெட்டன் கிராமத்தையும் இணைக்கிறது. இது 2012 இல் திறக்கப்பட்டது, சரிவுக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.

நோர்வே ஆட்டோமொபைல் ஃபெடரேஷன், பாலம் 2021 இல் சரிபார்க்கப்பட்டதாகக் கூறியது. தற்போது அத்தகைய பாலங்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள் எழுப்பப்படுகிறது.

 

பூகோள மறைமுக வர்த்தகப் போர், கோவிட்-19 பெரும் தொற்றின் தோற்றம் போன்ற காரணிகளால், ஏற்கனவே கடும் முறுகல் நிலையில் இருக்கும் அமெரிக்க சீன உறவில் இன்னொரு குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

சீன நிறுவனங்களில் முதலீடு செய்ய அமெரிக்கா விதித்திருக்கும் தடை காரணமாக குறித்த நிறுவனங்களை அடக்க அமெரிக்கா முயற்சிப்பதாக சீனா குற்றம் சுமத்தியுள்ளது.

வர்த்தகம், தென் சீனக் கடற்பரப்பு ஆக்கிரமிப்பு, உய்குர் இன முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல் செயற்பாடுகள், மற்றும் கொரோனா வைரஸ் பரவல் எனப் பல விவகாரங்கள் இரு நாட்டு உறவுக்கும் தடையாக உள்ளன. இந்த உறவு முன்னால் அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆட்சிக் காலத்தில் இன்னும் மோசமடைந்திருந்தது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு மற்று ம் இறையாண்மைக்கு எதிராக இருப்பதாகக் கூறி சீனாவின் பல மாபைல் செயலிகளுக்குக்குத் தடை விதிக்கப் பட்டது.

சீன இராணுவத்துடன் தொடர்புள்ளது என்ற பெயரில் 31 சீனப் பெரு நிறுவனங்களது பங்குகளுக்கு அதிபர் டிரம்ப் தடை விதித்தார். இதனால் சீனாவின் முக்கிய நிறுவனங்களது பங்குகள் கடும் சரிவடைந்தன. அண்மையில் இத்தடைப் பட்டியலை மீளாய்வு செய்த அமெரிக்க அதிபர் ஜோ பைடென் தலைமையிலான குழு இதில் மேலும் 28 சீன நிறுவனங்களைச் சேர்த்து தடையை விரிவு செய்துள்ளது.

பைடெனின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள சீனா தக்க பதிலடி தரப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மறுபுறம் முன்னால் அமெரிக்க அதிபர் டிரம்பின் பேஸ்புக் கணக்கை 2 ஆண்டுகளுக்கு முடக்கி அந்நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை விடுத்துள்ளது. இது தனக்கு வாக்களித்த மக்களுக்கு கிடைத்த அவமரியாதை என டிரம்ப் விசனம் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியில் ஒரு மாத கால மக்கள் நடமாட்ட முடக்கதினால்  தனது நாட்டில் கொரோனா வைரஸ் பரம்பலை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது என்று சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.

ஏப்ரல் 12 முதல் தொடரில் இருந்து மீண்ட நோயாளிகளின் எண்ணிக்கை புதிய தொற்றுநோய்களின் எண்ணிக்கையை விட

தொடர்ந்து அதிகமாக இருப்பதாக ஜென்ஸ் ஸ்பான் கூறினார். ஆனால் தொற்று விகிதம் 0.7 ஆக குறைந்துள்ளது என்று கூறுகிறார்.

ஜெர்மனியின் பிராந்தியங்களில் பூட்டுதல் அளவு வேறுபடுகிறது - இது பவேரியா மற்றும் சார்லண்ட் மாநிலங்களில் இறுக்கமாக உள்ளது. புதன்கிழமை அதிபர் அங்கேலா மேர்க்கெல் கட்டுப்பாடுகளை தளர்த்த ஆரம்பிக்க தற்காலிக நடவடிக்கைகளை அறிவித்தார்.

சில சிறிய கடைகள் அடுத்த வாரம் மீண்டும் திறக்கப்படும், மே மாத தொடக்கத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கத் தொடங்கும், குறிப்பாக தேர்வுகள் உள்ள மாணவர்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும்.

ஜெர்மனியில் தொற்றுநோய்யை விரைவாக கண்டறியும்   ஆய்வகங்களின் வலைப்பின்னல் சர்வதேச அளவில் பாராட்டப்பட்டது.  ஏப்ரல் தொடக்கத்தில் ஜெர்மனி தினசரி 100,000 க்கும் மேற்பட்ட  பரிசோதனைகளை மேற்கொண்டது, மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை விட அதிகமான கொரோனா வைரஸ் தொற்றாளர்களை முன்கூட்டியே  கண்டுபிடிக்க முடிந்தது.

ஆகஸ்ட் மாதத்திற்குள், ஜேர்மன் நிறுவனங்கள் சுகாதாரப் பணியாளர்களுக்காக வாரத்திற்கு 50 மில்லியன் முகமூடிகளை உற்பத்தி செய்யும் என்று திரு ஸ்பான் கூறினார்.

ஜெர்மனியின் ஒரு மாநிலமான சாக்சனி பொது போக்குவரத்து மற்றும் கடைகளில் முகமூடிகளை அணிவதை கட்டாயமாக்கியுள்ளது.  அண்டை நாடான ஆஸ்திரியா, செக் குடியரசு மற்றும் ஸ்லோவாக்கியாவில் முகமூடி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது.

குறைந்தளவு வீரியம் கொண்ட அணுவாயுதங்களை பூமிக்கடியில் வெடிக்க வைத்து சீனா இரகசிய சோதனை நடத்தியிருக்கலாம் என அமெரிக்காவின் வால் ஸ்டிரீட் ஜோர்னல் பத்திரிகை ஊகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா பற்றிய உண்மைத் தகவல்களை ஆரம்பத்தில் சீனா மறைத்தது தான் இந்தளவு உயிர்ச் சேதத்துக்குக் காரணம் என அமெரிக்கா சீனாவைக் குற்றம் சாட்டி வரும் வேளையில் இந்நிகழ்வும் இன்னும் பதற்றத்தை ஏற்படுத்தும் என்று கருதப் படுகின்றது.

ஆனால் அமெரிக்காவின் இச்செய்தியை மறுத்துரைத்துள்ள சீன வெளியுறவுத் துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கருத்துத் தெரிவிக்கும் போது, 'அமெரிக்காவின் இக்குற்றச்சாட்டு ஆதாரமற்றது. சீனா எப்போதும் அணுசக்தி விவகாரத்தில் சர்வதேசத்துக்கு அளித்த வாக்கை மீறாமல் தான் நடந்து வருகின்றது.' என்றுள்ளார்.

1996 இல் அமெரிக்காவும், சீனாவும் மேற்கொண்ட அணுவாயுத ஒப்பந்தம் இரு நாடுகளாலும் இன்னும் அங்கீகரிக்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஒப்பந்தம் இவ்வருடம் பெப்ரவரியுடன் காலாவதியும் ஆகியுள்ளது.

Worldometers இணையத் தளத்தின் சமீபத்திய அதிகாரப்பூர்வ தகவல் படி உலகம் முழுதும் சுமார் 210 நாடுகளில் பரவியுள்ள கோவிட்-19 என்ற கொரோனா பெரும் தொற்று நோய்த் தாக்கம் தொடர்பான முக்கிய புள்ளி விபரம் கீழே:

உலகளாவிய ரீதியில்,

மொத்தத் தொற்றுக்கள்: 2 279 244
மொத்த இறப்புக்கள்: 156 276
குணமடைந்தவர்கள்: 582 903
ஆக்டிவ் தொற்றுக்கள்: 1 540 065
மோசமான நிலையில் உள்ளவர்கள்: 57 522

நாடளாவிய புள்ளி விபரம்:

அமெரிக்கா: மொத்தத் தொற்றுக்கள் : 712 399 : மொத்த இறப்புக்கள் : 37 268
ஸ்பெயின்: 191 726 : 20 043
இத்தாலி: 172 434 : 22 745
பிரான்ஸ்: 147 969 : 18 681
ஜேர்மனி: 142 325 : 4403
பிரிட்டன்: 114 217 : 15 464
சீனா: 82 719 : 4632
ஈரான் : 80 868 : 5031
துருக்கி : 78 546 : 1769
பெல்ஜியம் : 37 183 : 5453
ரஷ்யா : 36 793 : 313
பிரேசில் : 34 485 : 2181
கனடா : 32 412 : 1346
நெதர்லாந்து : 31 589 : 3601
சுவிட்சர்லாந்து : 27 404 : 1344
போர்த்துக்கல் : 19 685 : 687
இந்தியா : 14 792 : 488
தென்கொரியா : 10 653 : 232
ஜப்பான் : 9787 : 190
இலங்கை : 248 : 7

இன்றைய புள்ளிவிபரத்தில் அமெரிக்காவில் மொத்தத் தொற்றுக்கள் 7 இலட்சத்தைக் கடந்துள்ளது. மொத்த இறப்புக்களின் எண்ணிக்கை 40 000 ஐ நெருங்கி வருகின்றது. அமெரிக்காவில் கடந்த சில நாட்களாகத் தினசரி பலி எண்ணிக்கை 2000 ஐ விட அதிகமாகவே உள்ளது. இந்தியாவில் மொத்தத் தொற்றுக்கள் 15 000 ஐ நெருங்கியும் பலி எண்ணிக்கை 500 நோக்கியும் விரைந்து வருகின்றது.

இதேவேளை கொரோனா தொற்றுதலைத் தடுக்க ஆப்பிரிக்கக் கண்டம் துரித நடவடிக்கைகளை எடுக்கா விட்டால் கொரோனாவின் அடுத்த மையமாக அப்பிராந்தியம் மாறி சுமார் 120 கோடிப் பேருக்கு இது தொற்றும் ஆபத்து உள்ளதாக ஐ.நா இன் ஆப்பிரிக்கப் பொருளாதார ஆணையம் எச்சரித்துள்ளது. பெப்ரவரி 14 இல் முதல் தொற்று இனம் காணப் பட்ட ஆப்பிரிக்காவில் தற்போது மொத்தத் தொற்றுக்கள் 18 000 ஐத் தாண்டியுள்ளது. அதிகபட்சமாக அல்ஜீரியா 348 உயிரிழப்புக்களைச் சந்தித்துள்ளது.

அல்ஜீரியாவை அடுத்து எகிப்து, மொரோக்கோ மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் அபாயத்தில் உள்ளன. இதேவேளை நிலமை கட்டுக்கடங்காது போனால் ஆப்பிரிக்காவில் 3 இலட்சம் முதல் 33 இலட்சம் வரையிலான உயிரிழப்புக்கள் ஏற்படலாம் என ஐ.நாவின் யுனெகா தெரிவித்துள்ளது. மேலும் ஆப்பிரிக்கா தீவிர சமூக விலகல் நடவடிக்கைகளைப் பின்பற்றினால் எதிர்பார்க்கப் படும் 120 கோடித் தொற்றுக்கள் 12.2 கோடியாகக் குறைய வாய்ப்புள்ளது என்றும் யுனெகா கணித்துள்ளது.

ஆப்பிரிக்காவின் தலைநகரங்களில் இருந்து தான் இந்தக் கொரோனா வைரஸ் வேகமாக ஏனைய பகுதிகளுக்கும் பரவி வருவதாகவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நெருக்கடியைச் சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை படிப்படியாக எளிதாக்குவது தொடர்பில் சுவிஸின் மத்திய கூட்டாட்சி அமைப்பு அறிவித்த நடைமுறைகள் பற்றி இன்றும் செய்தியாளர்களிடம் பேசினார்.

"ஒரு பின்னடைவைத் தவிர்ப்பதற்குத் தேவையான எல்லாவற்றையும்  நாங்கள் செய்கின்றோம். பாதுகாப்பு சாத்தியமான இடங்களில் நடைமுறைகளைத் தளர்த்துவோம்," என்று கூறினார். மக்கள் தொகை, தூரம் மற்றும் சுகாதார நடவடிக்கைகளை மதித்தால், மறுபரிசீலனை ஏற்படாது. அனைத்து வகையான இழப்புக்களும் மோசமடைவதைத் தவிர்க்க விரும்புகிறோம். இதிலே யாரும் உத்தரவாதங்களை வழங்க முடியாது. மே 11 க்குப் பிறகு, முதல் இரண்டு தொடக்க கட்டங்கள் தொற்றுநோயின் போக்கில் ஏற்படுத்தும் விளைவுகளை ஆராய்வோம் என்றார்.

உலகின் பிற பகுதிகளைப் போலவே இங்கும் தடுப்பூசி இல்லை, வைரஸை எதிர்த்துப் போராட தற்போது மருந்துகள் எதுவும் இல்லை, எனவே பாதுகாப்பு நடவடிக்கைகள் மட்டுமே மையமாக உள்ளன என்பதை நாம் ஒவ்வொருவரும் கவனத்திற் கொள்ள வெண்டும். நிலைமையை நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பதனால்தான் படிப்படியான அணுகுமுறை, என்றார்.

ஆட்சித் தலைவர் இவ்வாறான கருத்தினை வெளியிட்ட இன்றைய சனிக்கிழமை பிற்பகலில், சூரிச் மாநிலத்தில், உள்ள ஏரிக்கரையில் மக்கள் சகஜமாகக் குழுமியிருந்தைக் காணக்கூடியதாக இருந்ததாக ஒரு பொறியிலாளர் பத்திரிகையொன்றுக்கு படத்துடன் முறைப்பாடு  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

"முழு உலகமும் எதிர்கொள்ளும் கொடூரமான பிரச்சினையில் முழுமையான அக்கறை இல்லாத நிலையில், லிம்மாட் வழியாக நிம்மதியாக சூரிய ஒளியில் டஜன் கணக்கானவர்கள் உள்ளனர். இவர்களில் யாரும், ஷாப்பிங் செய்யவோ அல்லது மருந்தகத்திற்குச் செல்லவோ இல்லை. அரசின் அறிவிப்புக்களை யாரும் கவனிக்கத் தெரியவில்லை. அதிகாரிகள்அறிவுறுத்தும் 2 மீட்டர் தூரத்தை யாரும் மதிக்கவில்லை. இந்தக் கூட்டத்திற்குள் வயதானவர்களும் இருக்கிறார்கள், எனவே அதிக ஆபத்தில் உள்ளனர், இவ்வாறான நிலையில், மீண்டும் அலுவலகத்தில் வேலைக்குச் செல்லுமாறு கட்டளையிடப்படும்போது என்ன நடைபெறும் என்பது குறித்து அக்கறை கொள்கிறார்களா? " என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இத்தாலியில் கொரோனா தொற்றின் பாதிப்புக்கள் குறைந்து வருவதாக உணரப்பட்ட நிலையில், மே 3ந் திகதி அதன் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளில் தளர்வுகளை ஏற்படுத்த அரசு யோசித்து வருகிறது. இன்று இத்தாலிய சிவில் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி மொத்த இறப்புகளின் எண்ணிக்கையை 23,227 ஆகவுள்ளது.

ஒருநாளின் இறப்புத் தொகை 1000க்கும் கிட்டவாக இருந்த நிலையில் அது படிப்படியாகக் குறைந்து, இன்று 482 பேர் இறப்பு பதிவாகியுள்ளது. இது இறப்பு விகிதத்தில் மந்தநிலையை உறுதிப்படுத்துகிறது. இத்தாலியின் வடக்கு லோம்பார்டி பிராந்தியத்தின் மொத்த இறப்புக்கள் 12,050 . இத்தாலியின் மொத்த இறப்புக்களில் பாதிக்கும் மேலானது.

இது இவ்வாறிருக்க ; புதிய தொற்றுக்களின் தொகை சற்று அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. சமீபத்திய தரவுகளின்படி, நோய்த்தொற்றுகள் நேற்று வெள்ளிக்கிழமை முதல் 0.7% விகிதமாக உயர்ந்து தொற்றாளர்கள் தொகை 107,771 ஐ எட்டியுள்ளது. இதில் 44,927 பேர் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளார்கள். அதே நேரத்தில் தீவிர சிகிச்சை நோயாளிகளின் எண்ணிக்கை இரண்டு வாரங்களுக்கும் மேலாக வீழ்ச்சியைத் தொடர்ந்ததினால், இத்தாலியின் நீட்டிக்கப்பட்ட சுகாதார அமைப்பு மீதான அழுத்தத்தை மேலும் தளர்த்தியது.

2020 ஆம் ஆண்டில் தேசிய உற்பத்தியில் 9% வரை வீழ்ச்சியை எதிர்கொள்ளும் எனத் தெரிவிக்கபட்டுள்ள நிலையில், நாட்டின் மீட்புக்குத் திட்டமிடுவதற்கும் அதன் பலவீனமான பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் அரசாங்கம் தொடர்ந்து போராடுகிறது. பூட்டுதல் விதிகளை ஓரளவு தளர்த்தியதைத் தொடர்ந்து ஒரு சில கடைகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுநோயின் அடுத்த கட்டத்தை எவ்வாறு கையாள்வது என்பது பற்றிய விவாதம் சூடுபிடித்தது.

இது விடயத்தில் பிராந்திய ஆளுநர்களுக்கும் மத்திய அரசாங்கத்திற்கும் இடையிலான உராய்வு தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், பிராந்தியங்களும் ஒருவருக்கொருவர் சண்டையிடத் தொடங்கியுள்ளன. பெரும் இழப்பினைச் சந்தித்துள்ள வடக்கு லோம்பார்டியா மற்றும் வெனெட்டோ பிராந்தியங்கள் மே 3 ஆம் தேதி பூட்டுதல் முடிவடைவதற்கு முன்பே உற்பத்தி நடவடிக்கைகளை மீண்டும் திறக்கத் திட்டமிடத் தொடங்கின. ஆனால் இதனைத் தென் பிராந்தியங்கள் எதிர்த்தன. ​​தெற்கு காம்பானியா பிராந்தியம், ஒரு புதிய தொற்றுநோயைத் தவிர்ப்பதற்காக வடமாநில மக்களுக்கு எல்லைகளை மூடுவதாக அச்சுறுத்திய நிலையில் உரசல்கள் கடுமையாகின்றன.

இன்றைய சுவிஸ் ஊடகமாநாட்டில் தற்போதைய நிலை மற்றும் முடிவுகள் பற்றி கூட்டாட்சி அரசுத்தலைவர் சிமொனெத்தா சமறூகா, சுகாதார அமைச்சர் அலேன் பேர்சே மற்றும் பொருளாதார அமைச்சர் கி பார்மலேன் ஆகியோர் முடிவுகளை தெரிவித்தார்கள்.

“நான்கு வாரங்களிற்கு முன் முதல் முடிவுகள் கொவிட்-19ஐ குறைப்பதற்காக எடுக்கப்பட்டன. தற்பொழுது மருத்துவமனைகளின் நெருக்கடி குறைந்து வருகின்றது. எனவே படிப்படியாக வழமைக்குத்திரும்புவதற்கான முடிவுகளை இன்று எடுத்துள்ளோம்.” என்று கூறி 16.04.20 (இன்று) ஊடகமாநாட்டை சிமொனெத்தா சமறூகா ஆரம்பித்தார்.

“ஏப்ரல் 27 சிகை அலங்கார நிலையங்கள்,பூக்கடைகள், பண்ணைகள்,அழகுசாதன நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் ஆகியவை திறக்கப்படலாம். ஒவ்வொரு கடையும் திறக்கும் முன் தாங்கள் எவ்வாறு தொழிலாளர்களையும், வாடிக்கையாளர்களையும் பாதுகாக்க போகின்றார்கள் என்பதை முன்வைக்க வேண்டும். மே 11 அனைத்து கட்டாயப்பாடசாலைகளும், கடைகளும் திறக்கப்படும். இதை கண்காணிப்பது மிகவும் கடினம். எனினும் கண்மூடித்தனமாக நடப்பதை தவிர்க்க வேண்டும். யூன் 8 தொழிற்பாடசாலைகள், உயர்பள்ளிகள், அருங்காட்சியகங்கள், மிருககாட்சிசாலைகள் மற்றும் நூலகங்கள் திறக்கப்படும். இவையே நாம் படிப்படியாக அடுத்த கட்டத்திற்கு செல்வதற்காக எடுக்கப்பட்ட முடிவுகள் ஆகும் .” என சிமொனெத்தா சமறூகா மற்றும் அலேன் பேர்சே ஆகியோர் குறிப்பிட்டார்கள்.

“புதிதாக தொற்றேற்படும் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. எனினும் பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாக்கும் வண்ணம் நடந்து கொள்ள வேண்டும். அதுவே எமது இலக்கு. வேகமாக செயற்படுவதே எமது எண்ணம். எனினும் அவதானமாக செயற்படுவது அவசியம். வழமைக்கு சுவிஸ் திரும்புவது எமக்கு ஓர் நம்பிக்கையை தருகின்றது. நாம் அனைவரும் அடுத்த கட்டத்திற்கு கால் பதிக்கும் போது சுகாதார விதிமுறைகளையும், இடைவெளியை பேணுவதையும் கடைப்பிடிப்பதை மறந்து விடக்கூடாது.” என மேலும் அலேன் பேர்சே கூறி இருந்தார்.

தொழிற்கல்வியில் இறுதி ஆண்டில் கற்கும் மாணவர்களிற்கு பாடசாலைத்தேர்வுகள் நடைபெற மாட்டாது.பாடசாலைத்தேர்வுகளின் மதிப்பீடுகளிற்கு பதிலாக ஏற்கெனவே எழுதப்பட்ட தேர்வுகளின் மதிப்பீடுகள் சேர்க்கப்படும்.செயற்பாட்டுத் தேர்வுகள் இயலுமான வரை நடாத்தப்படும். இயலாத பட்சத்தில் தொழிற்கல்வி நிறுவனம் அனுபவப்புள்ளியை வழங்கலாம். அனைத்து மாநிலங்களிற்கும் இவையே விதிமுறைகளாகும். தொழிற்கல்வியை கற்கும் இறுதியாண்டு மாணவர்கள் தங்களின் கல்வியை முடிப்பது முக்கியமாகும். இல்லையெனில் இதனால் ஏறத்தாழ 75’000 மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். தொழிற்கல்வி பயிற்சியளிப்பவர்கள் மாணவர்களோடு இணைந்து பேசி முடிவுகளை எடுப்பது முக்கியமாகும்.

“இதனைத்தொடர்ந்து கொவிட்-19 தொடர்பான ஆய்வை செய்வதற்கு கூட்டாட்சி முடிவெடுத்துள்ளது. இதற்கு 20 மில்லியன் சுவிஸ் பிராங் தேவைப்படுகின்றது. இதற்கு பல தகவல்கள் தேவை, இதற்காகவே இந்த ஆய்வு செய்முவது பற்றி முடிவெடுக்கப்பட்டது. நாங்கள் ஒன்றாக செயற்படுவது பலம் என உறுதிப்படுத்தியுள்ளோம். எனவே நாங்கள் தொடர்ந்தும் ஒன்றாக தீர்வை எடுப்போம்.” என இறுதியாக கி பார்மலேன் கூறினார்.

மொழிபெயர்ப்பு: ர.நிதுர்ஷனா
Translation by Nithurshana Raveendran
Source: bag.admin.ch

கொரோனா வைரஸ் தாக்குதல் அச்சத்தில், ஜப்பானில் தனிமைப்படுத்தி நிறுத்திவைக்கப்பட்ட ‘டைமண்ட் பிரின்சஸ்’ சொகுசு கப்பல் பயணிகள் இருவர் வைரஸ் தாக்குதல் காரணமாகப் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தனிமைப்படுத்தப்பட்ட இக் கலில் இருந்து, வைரஸ் பாதிப்பு ஏற்படாதவர்கள், வைரஸ் தொற்று அறிகுறிகள் இல்லாதவர்கள், என சுமார் 3,700 பேர் கப்பலை விட்டு நேற்று வெளியேறினர்.

கப்பல் தனிமைப்படுத்தி வைக்கப்பட்ட கால எல்லை முடிவுற்றதால் கப்பலில் மீதம் இருக்கும் அனைவரும் அடுத்த இரண்டு நாட்களில் வெளியேற அனுமதிப்படுவார்கள் எனவும் அறியவருகிறது.

இதேவேளை ஏற்கனவே வைரஸ் தொற்றுக்காரணமாக, கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த பயணிகளில் ஜப்பானை சேர்ந்த முதியவர்கள் இருவர் நேற்று உயிரிழந்ததாக ஜப்பான் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் தமது நாட்டின் பாதுகாப்பையும், இறையாண்மையையும் உறுதி செய்ய தாக்குதல் போக்கு அவசியம் என்ற தொனியில் கருத்து வெளியிட்டுள்ளார்.

சமீப காலத்தில் வடகொரிய மற்றும் அமெரிக்க அதிபர்கள் இருமுறை நேரில் சந்தித்துப் பேசியும், பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றகரமான உடன்பாடும் எட்டப் படவில்லை. இதையடுத்து வடகொரியா மீண்டும் தனது அணுவாயுத, ஏவுகணை சோதனைகளை ஆரம்பித்திருப்பது சர்வதேச அளவில் அச்சுறுத்தலை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தான் தன் கட்சித் தலைவர்களுடன் அதிபர் கிம் திடீர் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி கலந்துரையாடியுள்ளார். இதன் போதே கிம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய நேர்மறையான தாக்குதல் போக்கு அவசியம் என்பதை வலியுறுத்தியதாகத் தெரிய வருகின்றது.

கடந்த வருடம் கிம் தனது விசேட புத்தாண்டு அறிவிப்பின் போது அணுவாயுதங்களைக் கைவிடுவது தொடர்பான முக்கிய தகவல்களை வெளியிட்டிருந்தார். அந்த வகையில் இம்முறையும் புத்தாண்டு அறிவிப்பின் போது, நாட்டின் பாதுகாப்பு மற்றும் அணுவாயுத விவகாரம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப் படுகின்றது.

சூடானில் 2018 ஆமாண்டு டிசம்பரில், விலைவாசி உயர்வு உட்பட பல பிரச்சினைகளை முன்வைத்து அரசுக்கு எதிராக பொது மக்களால் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப் பட்டது.

அங்கு 30 ஆண்டுகளாக அதிபராக இருந்த உமர் அல் பஷீர் இன் அரசு மக்களின் போராட்டத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்கியது. இதன்போது கைது செய்யப் பட்ட நூற்றுக் கணக்கான மக்களில் ஒருவரான அஹமது அல் காஹீர் என்ற ஒரு ஆசிரியையை இவ்வருடம் பெப்ரவரியில் சூடான் பாதுகாப்புப் படை படுகொலை செய்தது.

இதனால் போராட்டம் மேலும் தீவிரமானது. அதிபர் உமர் அல் பஷீர் இன் ஆட்சியைக் கலைத்து அவரை சிறையில் அடைத்த சூடான் இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியது. மேலும் ஆசிரியை கொலை வழக்கும் நடைபெற்று வந்த நிலையில், இதன் இறுதி விசாரணை திங்கட்கிழமை இடம்பெற்றது. இதன்போது குற்றம் நிரூபிக்கப் பட்ட 29 பாதுகாப்புப் படையினருக்கு மரண தண்டனை விதிப்பதாகத் தீர்ப்பளிக்கப் பட்டது.

மேலும் 13 பேருக்கு சிறைத் தண்டனையும் அளிக்கப் பட்டதுடன், 4 பேர் விடுதலையும் செய்யப் பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிலி நாட்டு இராணுவத்திற்குச் சொந்தமானவிமானமொன்று திடீரெனக் காணமற் போயிருந்தது. தொடர்பற்றுப் போயிருந்த அந்த விமானம் விபத்துக்கு உள்ளாகியிருக்கலாம் என ஊகம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில், தற்போது விமானத்தின் பாகங்கள் தென் அமெரிக்காவிற்கும் அண்டார்டிக்கிற்குமிடையிலான கடற்பரப்பில் மிதப்பது கண்டறியப்பட்டுள்ளது.

38 பேருடன் அண்டார்டிகா நோக்கி பயணித்த சிலி இராணுவத்திற்குச் சொந்தமான இந்த விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதில் 38 பேர் பயணம் செய்திருந்தார்கள்.

காணமற்போன விமானத்தை தேடும்பணி கடந்த இரு தினங்களாக நடைபெற்று வந்த நிலையில், இறுதியாக விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்ட இடத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில், அதன் பாகங்கள் கண்டுபிடிக்கபட்டுள்ளன.

இதன்மூலம் அவ்விமானம் விபத்தில் சிக்கியது உறுதியாகியுள்ளதாயினும் அதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. மேலும் அதில் பயணம் செய்த அனைவரும் இறந்திருக்கலாம் எனவும் எண்ணப்படுவதாகவும் தெரியவருகிறது.

செவ்வாய்க்கிழமை இவ்வருடத்துக்கான அமைதிக்கான நோபல் பரிசு கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பிய பிரதமர் ஆபை அகமதுவுக்கு வழங்கப் பட்டது.

ஐரோப்பாவின் நோர்வே தலைநகர் ஆஸ்லோவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் ஆபை அகமதுவுக்கு தங்கப் பதக்கமும், 6.5 கோடி ரூபாய்க்கான காசோலையும் வழங்கப் பட்டது.

எரித்ரியா நாட்டுடனான எல்லைப் பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்க இவர் எடுத்த முடிவுகளுக்காகவும், தனது நாட்டில் அமைதி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை ஏற்படுத்த இவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும் இவருக்கு இப்பரிசு அளிக்கப் பட்டுள்ளது. 43 வயதாகும் ஆபை அகமது இந்த அமைதிக்கான நோபல் பரிசை வென்றதன் மூலம் ஆப்பிரிக்காவின் நோபல் பரிசு வென்ற நெல்சன் மண்டேலா, வங்காரி மாத்தை மற்றும் வோலே சொயிங்கா ஆகியோரின் பட்டியலில் இணைகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்களில் அண்மையில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி சுமார் 2000 கோலா கரடிகள் பலியாகி விட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

இப்பகுதிகளில் கடந்த மாதம் ஒரே சமயத்தில் 100 வேறுபட்ட இடங்களில் காட்டுத் தீ கடுமையாகப் பரவியது.

2 இலட்சம் ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலம் இதனால் நாசமானது. 500 வீடுகள் பழுதடைந்தும், 4 பேர் உயிரிழந்தும் இருந்தனர். இன்றை வரைக்கும் இக்காட்டுத் தீ முழுமையான கட்டுப்பாட்டுக்கு வரவில்லை. தற்போது 50 இடங்களில் இக்காட்டுத் தீ தொடர்ந்து எரிந்து வருகின்றது. இந்நிலையில் தான் கோலா கரடிகளுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை சூழலியல் நிபுணர்களால் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

மேலும் பல கோலாக் கரடிகளின் வாழ்விடங்களும் காட்டுத் தீயில் அழிந்து விட்டதாகக் கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

உலகின் முன்னணி இணையத் தேடு தளங்களில் ஒன்றாகவும், உலகில் பரவலாகப் பாவிக்கப் படும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைக் கொண்டதாகவும் விளங்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது 44 மில்லியன் பாவனையாளர்கள் கசிவடையத் தக்க ஆபத்தான பாஸ்வேர்டைப் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் இப்பாவனையாளர்களது MSA எனப்படும் மைக்ரோசாஃப்ட் சேவைத் தளங்களில் இருந்து தகவல் திருடப்பட்ட வாய்ப்புள்ளதாக மைக்ரோசாஃப்ட் எச்சரித்துள்ளது. தற்போது மைக்ரோசாஃப்டின் Microsoft identity threat research team என்ற குழு தமது பில்லியன் கணக்கான பாவனையாளர்களில் இந்த பாஸ்வேர்டுகள் கசியாது பாதுகாப்பதற்கான உத்திகள் குறித்து தீவிர கவனம் செலுத்தி வருகின்றது.

இதன் மூலம் லீக்கான கணக்குகள் கண்டு பிடிக்கப் பட்டால் அப்பாவனையாளருக்கு உடனே அறிவுறுத்தி பாஸ்வேர்டை மாற்றச் செய்யக் கூடிய தானியங்கி செயலியையும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவுடன் இனிப் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்தவிதப் பயனும் இல்லை என வடகொரியா இறுதி முடிவு எடுத்திருப்பதாக உறுதிப் படுத்தப் படாத தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த பல வருடங்களாக வடகொரியாவின் அணுவாயுத ஏவுகணை சோதனைகளால் பகைமை தேசங்களாக அமெரிக்காவும் வடகொரியாவும் விளங்கி வந்தன.

ஆனால் எதிர்பாராத விதத்தில் இரு தேசங்களது அதிபர்களும் முதன் முறை 2018 மே மாதம் சிங்கப்பூரில் நேரடியாக சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் 2 ஆவது நேரடிப் பேச்சுவார்த்தை இவ்வருடம் பெப்ரவரியில் வியட்நாமில் இடம்பெற்றது. ஆனால் இந்தப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்ததாகவே கருதப் பட்டது. இதைத் தொடர்ந்து யாருமே எதிர்பாராத வகையில், டிரம்ப் கடந்த ஜூன் மாதம் வடகொரியாவுக்கு நேரில் சென்று அந்நாட்டு அதிபர் கிம் ஜொங் உன்னை சந்தித்தார்.

இதன் பின் அணுவாயுத மற்றும் ஏவுகணைச் சோதனைகளை கைவிடுவது தொடர்பான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது என இரு தலைவர்களும் உறுதி பூண்டனர். ஆனால் சில நாட்களுக்குள்ளேயே அமெரிக்க மற்றும் தென்கொரிய இராணுவப் படைகள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டது வடகொரியாவுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. எனவே அது மீண்டும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளைப் பரிசோதிக்கத் தொடங்கியது. எனினும் இந்த ஏவுகணை சோதனைகள் இரு தரப்புப் பேச்சுவார்த்தைக்குப் பாதிப்பு ஏற்படுத்தப் போவதில்லை என அமெரிக்கா தெரிவித்தது.

மேலும் வடகொரியா மீதான குறிப்பிடத்தக்க பொருளாதாரத் தடைகளை நீக்கும் புது ஒப்பந்தத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் கொண்டு வர அமெரிக்காவுக்கு வடகொரியா நிபந்தனை விதித்தது. மேலும் அமெரிக்கா தவறினால் வடகொரியா புதிய பாதையைக் கடைப் பிடிக்கும் எனவும் அது எச்சரித்தது.

இந்நிலையில் தான் அமெரிக்காவுடனான அணுவாயுதப் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் யாவும் அடைப்பட்டு விட்டதாக சனிக்கிழமை வடகொரியா அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஐ.நாவுக்கான வடகொரியா தூதர் கிம் ஜோங் தகவல் அளிக்கையில், அமெரிக்காவுடன் இனிப் பேச்சுவார்த்தை இல்லை என்று கூறியதாகத் தெரிய வருகின்றது.

திங்கட்கிழமை இந்தியப் பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப் பட்டு நிறைவேற்றப் பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாளை புதன்கிழமை எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மாநிலங்கள் அவையில் இக்குடியுரிமை திருத்த மசோதா உட்துறை அமைச்சர் அமித்ஷாவினால் சமர்ப்பிக்கப் படவுள்ளது.

இந்த மசோதாவில் ஈழத் தமிழ் அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கப் படாது என்றும், 2014 டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்பு, பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து குடியேறிய முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப் படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனாலேயே எதிர்க்கட்சிகளிடமும், பாகிஸ்தான் பிரதமரிடமும் கடும் கண்டனத்தை இது சம்பாதித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்ட கருத்தில், இந்த மசோதா மனித உரிமைகள் சட்டத்தை மீறும் வகையிலும், பாகிஸ்தானுடனான இருதரப்பு ஒப்பந்தத்தை மீறும் வகையிலும் உள்ளது என்ன விமர்சித்துள்ளதுடன், இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சீனாவுக்குக் கடன் வழங்கியதற்காக சர்வதேச நிதி நிறுவனமான உலக வங்கி மீது குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் இனிமேல் சீனாவுக்குக் கடன் வழங்க வேண்டாம் என்றும் உலக வங்கிக்கு வலியுறுத்தியுள்ளார்.

உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்திகளான சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடந்த ஒன்றரை வருடங்களாக வர்த்தகப் போர் தீவிரமடைந்து வருகின்றது.

இரு நாடுகளும் எதிர்த் தரப்பினரின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிப் பொருட்களுக்குக் கடுமையான வரிகளை விதித்து மோதிக் கொண்டன. ஆனாலும் அவ்வப்போது தமது வர்த்தகப் போரினை முடிவுக்குக் கொண்டு வரவென பேச்சுவார்த்தைகளிலும் இந்த இரு நாடுகளும் தம்மை ஈடுபடுத்தி வந்தன. இருந்த போதும் இந்த வர்த்தகப் போரினை முடிவுக்குக் கொண்டு வரும் முன்னேற்றம் இதுவரை ஏற்படவில்லை.

இந்நிலையில் தான் சீனாவிடம் மிகப் பெரும் பணம் கொட்டிக் கிடக்கின்றது என்றும், சீனாவுக்குக் கடன் வழங்குவதை உலக வங்கி உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் டிரம்ப் தெரிவிக்கையில், சீனாவிடம் பணம் இல்லை என்றால் அவர்கள் உருவாக்கிக் கொள்ளும் வல்லமையில் தான் உள்ளனர் எனவும் கடன் வழங்குவதை உடனே நிறுத்துங்கள் என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈராக்கில் கடந்த ஆக்டோபர் முதல் அரசுக்கு எதிராகவும், வேலை வாய்ப்பு, ஊழல் ஒழிப்பு, பொது மக்கள் பாதுகாப்பு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், நாடு முழுதும் பல முக்கிய நகரங்களில் பொது மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டவர்களை போலிசார் கண்ணீர்ப் புகைக் குண்டு வீசியும், துப்பாக்கியால் சுட்டும் களைத்தனர்.

இதில் ஏராளமானவர்கள் பலியாகினர். ஈராக் அரசின் இச்செயலுக்கு ஐ.நா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் அந்நாட்டுப் பிரதமர் அதெல் அப்துல் மஹதி பதவி விலகுவதாக அறிவித்தும் போராட்டம் தொடர்ந்து வருகின்றது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை தலைநகர் பாக்தாத்தில் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் உள்ளே புகுந்து துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் சராமரியான தாக்குதலை நடத்தினர்.

போராட்டக் காரர்களின் முக்கிய பகுதியான தஹிர் சதுக்கத்தில் நடந்த இந்த சமூக விரோதிகளின் ஊடுருவல் தாக்குதலில் 3 போலீசார் உட்பட 19 பேர் பலியாகினர். மேலும் 70 இற்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த சமூக விரோதிகளின் தாக்குதல் தொடர்பில் விசாரணை உடனடியாக நடைபெற்று வருவதாக ஈராக் அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த காம்பியாவில் இருந்து அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக கடந்த வாரம் ஸ்பெயின் நோக்கிச் சென்று கொண்டிருந்த அகதிகளின் படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கியதில் 58 பொது மக்கள் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

அட்லாண்டிக் கடற்பரப்பின் மவுரித்தானியா என்ற நாட்டின் நுவாதிபவ் நகருக்கு அருகே உள்ள கடலில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

படகு கடலில் கவிழ்ந்து தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த 85 பேர் உயிருடன் மீட்கப் பட்டனர். ஆனாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 58 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். எரிபொருள் மற்றும் உணவைப் பெற மவுரித்தானியா கடற்கரையை அடைய இவர்கள் நினைத்த போது தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தப் படகு கொள்ளக் கூடிய அளவை விட அளவுக்கு அதிகமான அகதிகள் இதில் பயணித்தது தான் விபத்துக்குக் காரணம் என அறிய வந்துள்ளது.

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com