Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

டெல்லி குண்டு தாக்குதல், இன்னமும் தீவிரவாதத்துக்கு எதிராக நாம் அனைவரும் விழிப்பாக இல்லை என்பதனையே எடுத்துக்காட்டுவதாகவும்,

உளவுத்துறையினர் சரியான நேரத்துக்கு தகவல் கொடுத்து எச்சரிக்கை செய்ய தவறிவிட்டார்கள் எனவும் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

டெல்லியில் இன்று நடைபெற்ற 15வது தேசிய ஒருமைப்பாட்டு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே இவ்வாறு தெரிவித்தார். தவறான போதனைகள், வேலையில்லா பிரச்சினை, சாதி-மத மோதல்கள், ஆயுதமின்றி போராடுபவர்கள் உரிய மதிப்பளிக்கப்படாமை என்பன இளைஞர்கள் தீவிரவாத பாதைக்கு செல்வதை நியாயப்படுத்துகின்றன.

நாகரீகமுள்ள எந்த ஒரு சமுதாயமும் இதனால் ஏற்படும் இழப்பையும், அன்புக்குரியவர்களின் உயிரிழப்புக்களையும் ஏற்றுக்கொள்ளாது. நமது உளவு பிரிவின் விசாரணை அமைப்பை வலுப்படுத்த வேண்டும். உளவுத்துறையினர் சரியான நேரத்துக்கு தகவல் கொடுத்து எச்சரிக்கை செய்ய தவறிவிட்டதால், டெல்லி குண்டுத்தாக்குதலை தவிர்க்க முடியாது போனது.

புலனாய்வு பிரிவினர் தகவல்கள் திரட்ப்படுவதை இன்னமும் மேம்படுத்த வேண்டும். மத்திய மாநில அரசுடன் அவர்கள் நெருக்கமான உறவினை பேணி தகவல்களை பகிர்ந்துகொள்ள வேண்டும். மத்திய அரசு நக்சைலைட்டு தீவிரவாதத்தை எடுக்கமிகுந்த கவனம் எடுத்து வருவது போல் இடதுசாரித்துவ தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. என தெரிவித்தார்.

0 Responses to புலனாய்வு பிரிவினர் விழிப்பாக இல்லை - மன்மோகன் குற்றச்சாட்டு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com