Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தலைமையில் நடப்பதாக இருந்த மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டம் அம்மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி வராதததால் ரத்து செய்யப்பட்டது. இதேபோன்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் வராததால் அந்த கூட்டமும் ரத்து செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தலைமையில் மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் பத்திரிக்கையாளர்கள் குவிந்தனர். சரியாக 9. 55 மணிக்கு ப. சிதம்பரம், காங்கிரஸ் மற்றும் திமுக நிர்வாகிகள் வந்தனர்.

அவர்கள் வந்து காத்திருந்தும் மாவட்ட கலெக்டரைக் காணவில்லை. காத்திருந்து கடுப்பானவர்கள் கலெக்டரைப் பற்றி விசாரித்தபோது தான் அவர் திடீர் என்று சென்னை சென்றுவிட்டது தெரிய வந்தது. இதையடுத்து கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

இதே போன்று சிவகங்கை மாவட்டத்தில் சிதம்பரம் தலைமையில் நடக்கவிருந்த கூட்டம் அம்மாவட்ட கலெக்டர் வராததால் ரத்து செய்யப்பட்டது.

0 Responses to கூட்டத்தை ரத்து செய்து, திரும்பிப் போன ப.சிதம்பரம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com