Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திருச்சியில் திராவிடர் கழக மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

அறிவியல் கண்ணோட்டத்துடன் சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். காவிரி நீர் பிரச்சினை, முல்லை பெரியாறு பிரச்சினை, பாலாற்றில் புதிய அணை கட்டுவது உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தீர்வு காண வேண்டும்.

மத்திய அரசு உறுதியளித்த படி ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் நேரடியாக தலையிட்டு அவர்களின் வாழ்வுரிமையை மீட்டு தரவேண்டும். கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் உரிமையை பெற்று தரவேண்டும்.

மத்திய அரசு வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை முறையாக அமுல்படுத்த வேண் டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 Responses to ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமையை மத்திய அரசு மீட்க வேண்டும்: திராவிடர் கழகம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com