Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தர்மபுரி அருகே உள்ள காரிமங்கலம் பஸ் நிலையத்தில் எம்.ஜி.ஆரின் முழு உருவசிலை அமைக்கப்பட்டுள்ளது. 7 1/2 அடி உயரம் உள்ள இந்த முழு உருவ சிலை 8 அடி உயர பீடத்தில் நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை நாளை காலை முதல் அமைச்சர் ஜெயலலிதா சென்னையில் இருந்து வீடியோ கான் பரன்சிங் மூலம் திறந்து வைக்கிறார்.

காரிமங்கலத்தில் மாவட்ட செயலாளரும், பாலக்கோடு எம்.எல்.ஏ.வுமான கே.பி.அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் சிலை திறப்பு விழாவில் பங்கேற்கிறார்கள். இது குறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

அ.தி.மு.க. சார்பில் தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் பஸ் நிலையம் அருகில் நிறுவப்பட்டுள்ள கழக நிறுவனத் தலைவர் பாரத் ரத்னா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் முழு வெண்கல திருவுருவச் சிலையை முதல் அமைச்சர் ஜெயலலிதா நாளை (திங்கட்கிழமை) காலை 9.30 மணியளவில் சென்னை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைக்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 Responses to வீடியோ கான்பரன்சிங் மூலம் எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைக்கிறார் ஜெயலலிதா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com