Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை பிரதமர் மன்மோகன் சிங் பாதுகாத்து வருவதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுஷ்மா சுவராஜ், ஊழலுக்கு எதிராக எனது அரசு போராடும் என மன்மோகன் சிங் சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். ஆனால் இப்போது சிதம்பரத்தை பாதுகாப்பதன் மூலம் அந்த உறுதிமொழியை அவர் மீறுகிறார் எனக் குறிப்பிட்டார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆ.ராசா செய்த அதே குற்றத்தை சிதம்பரம் செய்துள்ளார். சிபிஐயும் சிதம்பரத்தை காப்பாற்ற முயற்சிக்கிறது. பாஜக தலைவர்கள் அருண் ஷெளரி, ஜஸ்வந்த் சிங் ஆகியோரின் வாக்குமூலங்களை பதிவுசெய்த சிபிஐ சிதம்பரத்தை மட்டும் விசாரிக்க மறுக்கிறது என சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.

அரசை சீர்குலைக்கச் செய்ய எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக பிரதமர் தெரிவித்த குற்றச்சாட்டை சுஷ்மா நிராகரித்தார். 2ஜி தொடர்பான குறிப்பை நிதி அமைச்சகம்தான் எழுதியுள்ளது. பாஜக எழுதவில்லை. மேலும் 2ஜி ஊழலை வெளிப்படுத்தியது கணக்கு தணிக்கை துறை என்று சுஷ்மா குறிப்பிட்டார்.

பாஜகவின் அருண் ஜேட்லி கூறுகையில், பிரதமர் உண்மையைத்தான் பாதுகாக்க வேண்டுமே தவிர, அமைச்சரை அல்ல என்றார்.

0 Responses to சிதம்பரம் விவகாரம்: பிரதமருக்கு பாஜக கண்டனம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com