தமது நண்பரான கேணல் கடாபியை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கைவிட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடாபிக்கு எதிரான போராளிக்குழுவின் லிபிய இடைக்கால அரசாங்கத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையும் ஆதரவளித்தன் மூலம் இது வெளிப்பட்டுள்ளது.
முன்னதாக நேட்டோ படைகளின் உதவியுடன் கடாபிக்கு எதிராக தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டபோது கடாபிக்கு இலங்கை வந்தால் அவருக்கு அடைக்கலம் வழங்கப்படும் என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உறுதி வழங்கியிருந்தார்.
கடாபியின் படையின் மீது நம்பிக்கை வைத்தநிலையிலேயே இந்த உறுதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெளிப்படுத்தியிருந்தார்.
இது குறித்து மேற்குலக நாடுகள் தமது அதிருப்தியையும் வெளியிட்டிருந்தன.
எனினும் அவர் தோல்வியடைந்தமையை அடுத்து, தமது நண்பரை அவர் கைவிட்டு விட்டார்.



0 Responses to தமது நண்பரான கேணல் கடாபியை கைவிட்டார் மஹிந்த ராஜபக்ச