பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் அனுசரணையுடன் பிரான்ஸ் தமிழர் விளையாட்டுத் துறை, ஈழத் தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனத்துடன் இணைந்து பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் ஞாபகார்த்தமாக 4 ஆவது வருடமாக நடாத்திய உதைபந்தாட்டம் மற்றும் கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டிகள் பிரான்ஸின் கழக அணிகளுக்கிடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை சத்தோ து வன்சென்(Chateau de Vincenne) மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச் செல்வன் அவர்களின் திரு உருவப் படத்திற்கான ஈகச் சுடரினை 1993 ஆம் ஆண்டு புலோப்பளைச் சமரில் வீரச்சாவடைந்த மாவீரர் லெப்ரினன்ட் அனந்தன் அவர்களின் சகோதரி தவமணி சிறிஸ்கந்தராஜா அவர்கள் ஏற்றிவைத்தார்.
மலர் வணக்கத்தை ஈழத் தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத் தலைவர் சங்கர்ராஜா செலுத்தி உரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகின.
உதைபந்தாட்டத்தில் தமிழர் கழகங்களைச் சேர்ந்த 13 அணிகளும் கரப்பந்தாட்டத்தில் தமிழர் கழகங்களைச் சேர்ந்த 6 அணிகளும் பங்கேற்றன.
மிகவும் ஆர்வத்துடன் போட்டிகளில் அனைவரும் பங்கேற்றதைக் காணமுடிந்தது.
இந்நிகழ்வில் பலர் கலந்துகொண்டு விளையாட்டு நிகழ்வுகளைக் கண்டுகளித்தனர்.
நிகழ்வின் நிறைவாக வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசில் வழங்கப் பெற்றன.
பிரான்ஸ் பாரிஸில் இடம்பெற்ற பிரிகேடியர் தமிழ்ச் செல்வன் நினைவு சுமந்த விளையாட்டு நிகழ்வு!
பதிந்தவர்:
தம்பியன்
19 September 2011



0 Responses to பிரான்ஸ் பாரிஸில் இடம்பெற்ற பிரிகேடியர் தமிழ்ச் செல்வன் நினைவு சுமந்த விளையாட்டு நிகழ்வு!