Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அடையாள உண்ணா நிலைப் போராட்டமும், தியாக தீபம் திலீபனின் நினைவுவணக்க நிகழ்வும் தவிர்க்கமுடியாத காரணத்தால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. லண்டன் முத்துமாரி அம்மன் ஆலய சிவயோக மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இவ் நிகழ்வே இடமாற்றப்பட்டுள்ளது.

துரதிஸ்ட வசமாக சட்டரீதியான சிக்கலை எதிர்னோக்கியுள்ள சிவயோகம் அறக்கட்டளஇயினரால் அப்பகுதியில் தொடர்ந்தும் அவ் ஆலயத்தை வைத்திருக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதே இவ் இடமாற்றத்திற்குக் காரணம். கடந்த பல வருடங்களாக தாயகத்திற்கு நேரடியாக உதவிகள் பல செய்துவந்த இவ் அறக்கட்டளையினரால் ஆலய மண்டபத்தினூள்ளேயே மாவீரர்கள் நினைவாக நினைவாலயம் ஒன்று அமைக்கப்பட்டும் இருந்தமை குறிப்பிடத்த்அக்கது.

இதனடிப்படையில் பிரித்தானியத் தலைநகர் லண்டனில் உள்ள 366A - Stage Lane, Kingsbury, London, NW9 9AA எனும் முகவரியில் அமைந்துள்ள 'RNB Venue' மண்டபத்தில் எதிர்வரும் 26-09-2011 திங்கள் கிழமை காலை 8:00 மணி முதல் மாலை 8:00 மணி வரை நடைபெறவுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தொடரில் சிறீலங்கா மீதான போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி பல மனித உரிமை அமைப்புக்கள் குரல் கொடுத்துவரும் இவ்வேளையில் பிரித்தானியத் தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் அதற்கு வலுச்சேர்க்கும் முகமாகவும், தாயகத்து உறவுகளின் இன்றைய அவல வாழ்வை நீக்கும் பொருட்டு சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அடையாள உண்ணாவிரதமும் நடாத்தப்படவுள்ளது.

1. போரின் பின்னரும் தமது வாழ்விடங்களுக்கு செல்ல முடியாமல் தடுப்பு முகாம்களில் அடைத்துவைக்கப் பட்டுள்ள மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்த ஆவன செய்யவேண்டும்.

2. நீண்ட காலமாக சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை மனிதாபிமானத்துடன் விடுதலை செய்து அவர்களின் குடும்பத்தினருடன் வாழ அனுமதிக்க வேண்டும்.

3. இலங்கையில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வரும் தமிழினப் படுகொலையை தடுத்து தமிழர்கள் தமது வரலாற்றுத் தாயக மண்ணில் சுய கெளரவத்தோடு வாழும் நிலையை உருவாக்க வேண்டும்.

இவ் மூன்று அம்சக் கோரிக்கைகளையும் முன்வைத்து அடையாள உண்ணா நிலைப் போராட்டம் நடாத்தப்படும் இந்த நிகழ்வில், பாடசாலைப் பிள்ளைகளின் ஆக்கங்களான கவிதைகள், பேச்சுக்கள், எழுச்சிப் பாடல்கள், எழுச்சி நடனங்கள் போன்றனவும் இடம்பெறவுள்ளது.

இதில் கலந்துகொள்ள விரும்பும் சிறார்கள் மற்றும் ஆர்வமுள்ளோர் 19-09-2011 செவ்வாய்க் கிழமைக்கு முன்பதாக britishtamilsunion@gmail.com எனும் மின்னஞ்சலூடாக அல்லது 02087338268 / 07877204123 / 07400219654 எனும் கைத்தொலைபேசி இலக்கங்களினூடாக தொடர்புகொண்டு எமக்கு அறியத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வருடம் அடையாள உண்ணா நிலைப் போராட்டமும் இணைக்கப்பட்டு தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் நினைவு வணக்க நிகழ்வும், மற்றும் மாவீரர்களான கேணல் சங்கர், கேணல் ராயூ உட்பட இம்மாதத்தில் வீரச்சாவைத் தழுவிய அனைத்து மாவீரர்களையும் நினைவுகொள்ளும் நிகழ்வாக அமைவதால் பிரித்தானியாவில் ஒருங்கிணைந்த வகையில் ஒரே இடத்தில் முழுநாள் நிகழ்வாக நடைபெறவுள்ளது.

முழுநாள் நிகழ்வு என்பதால் பிரித்தானியாவில் எப்பகுதியில் இருப்பவர்களாக இருந்தாலும் தமது நேரத்திற்குத் தகுந்தவாறு தியாகி தீபம் திலீபன் அவர்கட்கும், இம் மாதத்தில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களுக்கும் வீரவணக்கத்தினை செலுத்திக்கொள்ளும் அதே வேளை அன்றைய தினம் நடைபெறும் உண்ணானிலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்து ஒன்றுபட்ட தமிழராய் எம்மினத்தின் விடுதலைக்கு வழிசமைப்போம்.

0 Responses to அடையாள உண்ணா நிலைப் போராட்டமும், தியாக தீபம் திலீபனின் நினைவு வணக்க நிகழ்வும் இடமாற்றம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com